2000கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலப்பகுதி2000ஆம் ஆண்டு ஆரம்பித்து2009-இல் முடிவடையும். இக்காலப்பகுதி பொதுவாக பல்வேறு தரப்பட்ட தாக்கங்களைக் கொண்டிருந்தது.பொருளாதாரத்தில்ஆசிய நாடுகளின் வளர்ச்சி, முக்கியமாகசீனா, மற்றும்இந்தியாவின் மாபெரும் பொருளாதார வளர்ச்சி உலக வர்த்தகத்தில் தாக்கத்தை உண்டுபண்ணியது.
ஜனவரி 15: முன்னாள்ஈராக்கிய அதிபர்சதாம் ஹுசேனின் உறவினர் பர்சான் இப்ராகிம், முன்னாள் ஈராக்கிய பிரதம நீதிபதி அவாட் ஹமெட் ஆகியோர்1982 ஆம் ஆண்டில் 148 ஷியைட் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் உடந்தையாக இருந்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.
ஜனவரி 6:இலங்கை,காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.
ஜனவரி 5:இலங்கை,கொழும்பிலிருந்து 36கி.மீ. தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
மார்ச் 1 -இலங்கை விமானப் படையின் பிரி-06 ரக பயிற்சி விமானம்அநுராதபுரம் அருகில் வீழ்ந்து நொருங்கியதில் அதன் பயிற்சியாளரும் பயிற்சி பெற்ற விமானியும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 12 -இந்தியாஅக்னி-III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தரஏவுகணையை 3000 கி.மீ. தூரத்துக்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
ஏப்ரல் 16 -ஐக்கிய அமெரிக்காவின்வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் இனந்தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 33 பேர் படுகொலை செய்யப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.
சூன் 11 -வங்காள தேசத்தில் கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் 118 பேர் கொல்லப்பட்டனர்.
சூன் 11 -தெற்குசீனாவில் வெள்ளம் காரணமாக 66 பேர் பலியாயினர். 600,000 பேர் வீடுகளை இழந்தனர்.
சூன் 14 -காசாப் பகுதி தமது முழுக்கட்டுப்பாட்டில் வந்திருப்பதாகஹமாஸ் இயக்கம் அறிவித்தது.பாலஸ்தீன அதிபர்மஹ்மூத் அப்பாஸ் அமைச்சரவையைக் கலைத்து நாட்டில் அவசரகாலநிலையை அமுல் படுத்தினார்.
சூலை 11 -பாகிஸ்தான் தலைநகர்இஸ்லாமாபாத்திலுள்ளசெம்மசூதிக்குள் இருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்றும் முகமாக இராணுவத்தினர் மசூதியின் மீது தாக்குதல் நடத்தியதில் மசூதியின் மதகுருஅப்துல் காஸி உட்பட குறைந்தது 50 பேர் பலியாகினர்.
சூலை 17 -பிறேசிலில்சாவோ பவுலோ என்ற இடத்தில் பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்த 176 பேர் உட்பட 200 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
ஆகத்து 4 -இந்தியா,வங்காள தேசம் மற்றும்நேபாளம் ஆகிய நாடுகளில் பெரும் வெள்ளப் பெருக்கால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
செப்டம்பர் 26 -வியட்நாமில் பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 60 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
அக்டோபர் 18 -கராச்சி நகரில் எட்டு ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பியபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்பெனாசிர் பூட்டோவை ஏற்றிச் சென்ற பார ஊர்தி அருகே இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 138 பேர் கொல்லப்பட்டு 600 பேர் படுகாயமடைந்தனர்.
அக்டோபர் 22 -தெற்குகலிபோர்னியாவில் பரவிய பெரும் காட்டுதீயினால் 500,000 பேர் இடம்பெயர்ந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாயின.
அக்டோபர் 24 -சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் 'சாங்-ஒன்று' தென்மேற்குசீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
நவம்பர் 3 -இலங்கையில் இருந்து இரகசியமாகலண்டனுக்கு சென்ற துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தகருணா, போலி கடவுச் சீட்டு வைத்திருந்ததாக லண்டனில் கைது செய்யப்பட்டார்.
நவம்பர் 7 -பின்லாந்து,ஹெல்சிங்கி நகரில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற சூட்டு நிகழ்வில் 8 பேர் கொல்லப்பட்டுப் பலர் படுகாயமடைந்தனர்.
டிசம்பர் 5 -அநுராதபுரத்தில் கெப்பிட்டிகொல்லாவ என்ற இடத்தில் பயணிகள் பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்டகிளைமோர் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டு 23 பேர் படுகாயமடைந்தனர்.
டிசம்பர் 11 -மன்னாரில்இலங்கைப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற மோதலில் 20 இராணுவத்தினரும் 3புலிகளும் கொல்லப்பட்டனர்.
டிசம்பர் 17 -பொலீவியாவின் நிர்வாகப் பகுதிகாளான பெனி, பாண்டோ, சாண்டா குரூஸ், தரிஜா ஆகியன நடுவண் அரசிலிருந்து சுயாட்சி மாகாணங்களாகத் தம்மை அறிவித்தன.
டிசம்பர் 20 - 81 ஆண்டுகள், 7 மாதங்கள், 29 நாட்களை நிறைவு செய்துபிரித்தானியாவை ஆட்சிசெய்த மன்னர்கள், மகாராணிகளில் மிகவும் வயது முதிர்ந்தவரென்ற பெருமையை மகாராணிஇரண்டாம் எலிசபெத் பெற்றார்.
டிசம்பர் 21 -பாகிஸ்தானில் பெஷாவார் நகரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.
டிசம்பர் 29 -மன்னாரில்இலங்கைப் படையினரின் பாரியளவிலான முன்நகர்வு நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற சமரில் 20-க்கும் மேற்பட்ட படையினரும் 3 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டதாக புலிகள் அறிவித்துள்ளனர்.
பெப்ரவரி 3 -கொழும்புகோட்டைதொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டு 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பெப்ரவரி 19 - 51 ஆண்டுகள்கியூபாவின் ஜனாதிபதியாகவும் இராணுவத் தலைவராகவும் இருந்தபிடெல் காஸ்ட்ரோ தனது பதவிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பெப்ரவரி 21 - விண்ணிலிருந்து பூமியை நோக்கி வீழ்ந்து கொண்டிருந்தஅமெரிக்க உளவுசெய்மதியானயூஎஸ்ஏ 193ஐ அமெரிக்கக் கடற்படையினர் சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் பூமிக்கு அதனால் எவ்வித ஆபத்தும் இனி இல்லை எனவும் அமெரிக்கா அறிவித்தது.
மார்ச் 22 -முல்லைத்தீவுநாயாறு கடற்பரப்பில்இலங்கைக் கடற்படையினரின் அதிவேக டோறா பீரங்கிப்படகு ஒன்றுகடற்புலிகளினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 16 கடற்படையினரில் 6 பேர் காப்பாற்றப்பட்டதாக அரசு தெரிவித்தது.
ஏப்ரல் 20 - வட கிழக்கு மனித உரிமைகள் செயலகப் பணிப்பாளர் வண. கருணாரத்தினம் அடிகள்வன்னியில் அம்பல்குளம் என்ற இடத்தில்கிளைமோர்த் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார்.
ஏப்ரல் 23 -கிளாலி முதல்முகமாலை வரை 7கி.மீ. முன்னரண் பகுதியில்இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு படையினர் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 25 -கொழும்பின் புறநகர்ப் பகுதியில்பேருந்து ஒன்றினுள் குண்டு வெடித்ததில் 24 பொதுமக்கள் கொல்லப்பட்டு, 52 பேர் படுகாயமடைந்தனர்.
மே 12:சீனாவின் சிச்சான் மாநிலத்தின் வென்சுவா மாவட்டத்தில் 7.8ரிக்டர் அளவுநிலநடுக்கம் ஏற்பட்டதில் 70,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
மே 16 -கொழும்பு மத்தியில் வான்படையினரின் சோதனை நிலையம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 7 காவல்துறையினர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டு 90 பேர் காயமடைந்தனர்.
மே 18:மன்னார், கருங்கண்டல்குளம் அணை ஊடாக வண்ணாங்குளம் நோக்கிஇலங்கைப் படையினர் மேற்கொண்ட நகர்வுக்கு எதிராகவிடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு, 40-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மே 23 -கிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டி அக்கராயன் வீதியில்இலங்கைப் படையினர் நடத்தியகிளைமோர்த் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
மே 23:பத்து பூத்தே தீவு (Pedra Branca) மீதான அரசுரிமையைஅனைத்துலக நீதிமன்றம்சிங்கப்பூருக்கு வழங்கியது. சிங்கப்பூருக்கும்மலேசியாவுக்கும் இடையில் இருந்த 28 ஆண்டுக்கால சர்ச்சை முடிவுக்கு வந்தது. இத்தீவுக்குச் சற்றுத் தள்ளியுள்ள இரண்டு சிறிய தீவுத்திட்டுகள் - மிடல் ரோக்ஸ், சவுத் லெட்ஜ் ஆகியவை மலேசியாவுக்குச் சொந்தமானவை என முடிவு செய்தது.
மே 26:கொழும்பில் இருந்துபாணந்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததொடருந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டு 73 பேர் படுகாயமடைந்தனர்.
ஜூன் 11 -கியூபாவில் ஒரே தொழில் செய்பவர்கள் சமமான ஊதியம் பெறும் முறை ஒழிக்கப்பட்டு அவர்களின்உற்பத்தித்திறனுக்கு ஏற்ப ஊதியம் பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜூன் 22 -சிம்பாப்வேயில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளை அடுத்துஜூன் 27 இல் இடம்பெறவிருக்கும் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்மோர்கன் சங்கிராய் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஆகத்து 8 -முல்லைத்தீவு மருத்துவமனையினுள்இலங்கைப் படையினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஒரு வயது குழந்தை கொல்லப்பட்டது. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் உட்பட 16 பேர் காயமடைந்தனர்.
ஆகத்து 26 -பீகார் மாநிலத்தில்கோசி ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் ஏற்பட்டதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
ஆகத்து 26 -திருகோணமலை துறைமுகத்தின் மீதுவான்புலிகளின் வானூர்தி தாக்குதல் நடத்தியதில் இலங்கைக் கடற்படையினர் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர்.
ஆகத்து 30 -கிளிநொச்சி புதுமுறிப்புப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் மீது படையினர் நடத்தியஎறிகணைத் தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட ஐவர் கொல்லப்பட்டு மூவர் காயமடைந்தனர்.
செப்டம்பர் 20 -பாகிஸ்தான் தலைநகரம்இஸ்லாமாபாதில் "மேரியாட்" விடுதி மீது நடந்த தானுந்து குண்டுவெடிப்பில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டு 100 பேர் படுகாயம் அடைந்தனர்.
செப்டம்பர் 25 -சீனா தனதுசென்ஷோ 7 என்ற விண்கலத்தை மூன்று விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு அனுப்பியது. முதற்தடவையாக தனது வீரரை விண்ணில் நடக்க வைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
செப்டம்பர் 27 -கிளிநொச்சி நகர் இரத்தினபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீதுஇலங்கை வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு, கைக்குழந்தையுடன் மூன்று சிறார்கள் உட்பட எட்டு பேர் படுகாயமடைந்தனர்.
நவம்பர் 23 -கினி-பிசாவு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததை அடுத்து அங்கு இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது. ஒருவர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர்.
நவம்பர் 29 -கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீதுஇலங்கை வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
டிசம்பர் 27 -காசா பகுதியில்இஸ்ரேல் குண்டுகளை வீசியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 225பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
டிசம்பர் 28 -கொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 படையினர் உட்பட 19 பேர் காயமடைந்தனர்.
↑Gordon PH; Meunier S (2001).The French challenge: Adapting to globalization. Washington, D.C.: Brookings.
↑Heizo T; Ryokichi C (1998)."Japan".Domestic Adjustments to Globalization (CE Morrison & H Soesastro, Eds.). Tokyo:Japan Center for International Exchange, pp. 76–102. Retrieved திசம்பர் 30, 2009.