Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

வக்ஃபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வக்ஃபு (Waqf) என்பதன் பொருள் (அறக்கொடையை) நிலைநாட்டுதல் ஆகும். ஒரு சொத்தை வக்ஃபு செய்வதன் மூலம் அந்தச் சொத்தின் உரிமையை இறைவனுக்கு உரித்தாக்கி, அதன் வருமானத்தையும் பலனையும் மக்களின் நலனுக்காக செலவிடுவதே நோக்கமாகும். வக்ஃப் அளிப்பவரைவாகிஃப் என்பர்.இசுலாமிய சமயம் தொடர்பாகபள்ளிவாசல், கல்வி நிலையம் அல்லது தொண்டு நிறுவனம் அமைக்கும் நோக்கத்திற்காக முஸ்லீம்கள் இறைவன் பெயரால் அறக்கொடை வழங்குவர். ஒருவர் தன்னுடைய சொத்துக்களை வக்ஃபு என்ற அறம் செய்து விட்ட பிறகு, அவரும் அவருடைய வழித்தோன்றல்களும் அந்தச் சொத்துக்களின் நிர்வாகிகளாக இருக்க முடியுமே தவிர, உரிமையாளர்களாக இருக்க முடியாது.

வக்ஃபின் வகைகள்

[தொகு]

பொதுவாக, வக்ஃபு சொத்துக்கள் பொது வக்ஃபு, தனி வக்ஃபு, பாதி பொது என மூவகைப்படும். பாலம், கிணறு, சாலை போன்ற அறக்கொடைகள் பொது வக்ஃப் என்பர். வக்ஃபு அளிப்பவரின் குடும்ப நலனுக்கும் உறவினருக்கும் மட்டுமே நன்மை அளிப்பது தனி வக்ஃபு ஆகும். குடும்ப நலனுக்காகப் பாதியும், பொது நலனுக்காகப் பாதியும் அளிக்கப்படும்போது பாதி பொது வக்ஃப், பாதி தனி வக்ஃபு எனப்படும்.

இந்தியாவில் வக்ஃப் சட்டம்

[தொகு]

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக்காலத்தில் முதன்முதலாக வக்ஃபு சொத்துக்கள் தொடர்பாக 1923-ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டது.[1]1954-ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு இயற்றிய 1923-ஆம் ஆண்டின் வக்ஃபு சட்டத்தை நீக்கி விட்டு, 1954-ஆம் ஆண்டில் புதிய வக்ஃபு சட்டம் இயற்றப்பட்டது.[2] இச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் வக்ஃபு சொத்துக்களை நிர்வகிக்கதமிழ்நாடு வக்பு வாரியம் போன்ற வக்ஃபு வாரியங்கள் நிறுவப்பட்டன. பின்னர் 1995-ஆம் ஆண்டில் புதிய வக்ஃபு சட்டம் இயற்றப்பட்டு, 1954-ஆம் ஆண்டு வக்ஃபு சட்டம் நீக்கப்பட்டது.[3]

வக்ஃபு சொத்துக்களின் நிர்வாகம்

[தொகு]
முதன்மைக் கட்டுரை:முத்தவல்லி

வக்ஃபு சொத்துக்களை நிர்வகிப்பவர்களைமுத்தவல்லி என்பர். வக்ஃபு சொத்துகளான பள்ளிவாசல்கள், தர்காக்கள், சமயக் கல்வி நிலையங்களான (மதராசாகள்), பொதுக் கல்வி நிறுவனங்களான பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவைகளை நிர்வகிப்பதற்கு, அவற்றைக் கொடையாக கொடுத்தவர்களையோ அவரது வழித்தோன்றல்களையோமுத்தவல்லிகளாக வக்ஃபு வாரியம் நியமனம் செய்யும். கொடையாளர்களின் வாரிசுகள் இல்லாது போனால், வக்ஃபு வாரியம் பொறுப்பானவர்களை முத்தவல்லியாக நியமிக்கலாம். முத்தவல்லி நியமனத்தில் சர்ச்சைகள் ஏற்பட்டால் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் முடிவு எடுக்கும்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. THE MUSSALMAN WAKF ACT, 1923
  2. WAKF ACT, 1954
  3. The Wakf Act, 1995

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வக்ஃபு&oldid=4244316" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp