ராம்லா (Ramla) (எபிரேயம்:רַמְלָה,Ramla;அரபி:الرملة,ar-Ramlah) வட்டார வழக்கில் இந்நகரை ராம்லே அல்லது ரெம்லே அல்லது ராமா என்றும் அழைப்பர்.[2] இந்நகரம் இஸ்ரேல் நாட்டின் நடுப்பகுதியில், மத்திய மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ராம்லா நகரம், தற்காலஇஸ்ரேல் நாட்டில்உமையா கலீபகம் ஆட்சியின் போது,கிபி 8-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிறுவப்பட்டது. இந்நகரம் எகிப்தின்கெய்ரோ நகரத்தையும்,சிரியாவின்டமாஸ்கஸ் நகரத்தையும் இணைக்கும் வகையில் நிறுவப்பட்டது. இராம்லா நகரததுடன் கிழக்கில் மத்திய தரைக் கடலின் ஜாப்பா துறைமுகம் மற்றும் மேற்கில்ஜெருசலம் நகரங்களை இணைக்கும் சாலைகள் உள்ளது.[3]
துவக்கத்தில் ராம்லா நகரத்தில் பாலஸ்தீனர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தனர்.1948 அரபு இஸ்ரேலியப் போருக்குப்[4]பின் இஸ்ரேலிய அரசு, ராம்லா நகரத்தில்யூதர்களை அதிக அளவில் குடியேற்றினர். 2019-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி, ராம்லா நகரத்தின் மொத்தமக்கள் தொகையில் யூதர்கள் 76% ஆகவும்; பாலஸ்தீனர்கள் 24% ஆகவும் இருந்தது.
விவிலியம் நூலின் படி, ராம்லா நகரம் முன்னர்பிலிஸ்தியர்களின் காத் எனும் நகரமாக இருந்தது.[5][6] அகழ்வாய்வின் போது இப்பழைய நகரம் ராம்லா நகரத்திற்கு வெளியே தெற்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.[7]
ராம்லா நகரத்தில் 1992-1993-ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.[8] பின்னர் 2010 முதல் ராம்லா நகரத்தில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.[9]
நியண்டர்தால் மனிதனுக்கு முந்தைய மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
2021-ஆம் ஆண்டில் ராம்லா நகரத்தின் வெளிப்புறத்தில் நடத்தப்பட்ட அகழாய்களில்நியண்டார்தல் மனிதனுக்கு முந்தைய காலத்திய, சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த நபர் ஒருவரின் பகுதி அளவு மண்டை ஓடு மற்றும் தாடை எலும்பு மற்றும் கற்கால கருவிகளும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.[10][11][12][13]
↑King, Edmund (2004) "Stephen (c.1092–1154)"Oxford Dictionary of National Biography Oxford University Press, Oxford, England,online edition accessed Oct 27, 2009
↑University of Haifaபரணிடப்பட்டது 2016-03-03 at theவந்தவழி இயந்திரம் Excavation in Marcus Street, Ramala; Reports and studies of the Recanati Institute for Maritime Studies and Excavations, Haifa 2007
Eisener, R. (1997). "Sulaymān b. ʿAbd al-Malik".The Encyclopaedia of Islam, New Edition, Volume IX: San–Sze. Leiden: E. J. Brill. 821–822.பன்னாட்டுத் தரப்புத்தக எண்90-04-10422-4.
Luz, Nimrod (April 1997). "The Construction of an Islamic City in Palestine. The Case of Umayyad al-Ramla".Journal of the Royal Asiatic Society7 (1): 27–54.doi:10.1017/S1356186300008300.
Mukaddasi (1906). M.J. de Goeje (ed.).Kitāb Aḥsan at-taqāsīm fī maʻrifat al-aqālīm (The Best Divisions for Knowledge of the Regions) (in அரபிக்). Leiden: Brill Co.கணினி நூலகம்313566614. (3rd edition printed by Brill in 1967)