Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

மெனோரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீளமைக்கப்பட்ட ஓர் மெனோரா

மெனோரா (எபிரேயம்:מְנוֹרָה‎) என்பது ஏழு கிளைகள் கொண்ட தங்கத்தினாலான ஒரு விளக்குத் தண்டு எனவேதாகமம் கூறுகின்றது. இதுமோசேயினால் காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்ட திருக்கூடாரத்திலும், பின்பு எருசலேம் திருக்கோயிலிலும் வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் அந்த விளக்கில் ஒளியேற்ற தூய புதியஆலிவ் எண்ணெய் எரிக்கப்பட்டது. பண்டைய காலந்தொட்டு மெனோராயூதத்தின் அடையாளமாக இருந்து வந்தது. தற்போதுஇசுரேலின் சின்னமாக இருக்கிறது.

உருவாக்கம்

[தொகு]

மெனோரா, ஒரு அடிப்பாகத்தையும் ஆறு கிளைகள் கொண்ட ஒரு தண்டையும் கொண்டு கெட்டியான தங்கத்தினால் உருவாக்கப்பட்டது. ஆறு கிளைகளும் நடுத் தண்டின் உயரத்திற்கேற்ப வளைந்து காணப்படும். ஆகவே, ஏழு விளக்குகளின் உச்சிகளும் சம ஒழுங்கில் காணப்படும்.[1]

கடவுள் மோசேக்கு மெனோராவின் வடிவத்தை வெளிப்படுத்தி அதன் உருவாக்கம் பற்றி கூறியதாக பின்வருமாறு வேதாகமத்தில் அல்லதுதோராவில் காணப்படுகிறது. (விடுதலைப்பணயம்/யாத்திரையாகமம் 25:31-40):

31 பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்.32 ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதன் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதன் மறுபக்கத்திலும் விடவேண்டும்.33 ஒவ்வொரு கிளையியும் வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருப்பதாக; குத்துவிளக்கிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும்.34 விளக்குத்தண்டிலோ, வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக.35 அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருப்பதாக; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்.36 அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக; அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும்.37 அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது.38 அதன் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக.39 அதையும் அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும்.40 மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. Birnbaum, Philip (1975).A Book of Jewish Concepts. New York: Hebrew Publishing Company. pp. 366–367.

கூடுதல் வாசிப்பு

[தொகு]

வெளி இணைப்பு

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Menorah
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Structures
Elements
Priesthood
History
கோவில் மலை
See also
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெனோரா&oldid=4123907" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:
மறைந்த பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp