கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
This articlehas nolead section. Please help by adding an introductory section to this article. For more information, see thelayout guide, and Wikipedia'slead section guidelines to ensure the section will be inclusive of all the essential details. Please discuss this issue on the article'stalk page.(சூலை 2018)
மீனவர்கள்
தமிழர் தாயகங்களானதமிழ்நாடும்,தமிழீழமும் நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடுஇந்தியாவின் 13% கடற்கரையையும், (1076கி.மீ.)[1], தமிழீழம்இலங்கையின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ளன.கடலில் உணவுக்காகவும், விற்பனைக்கும்,மீன் பிடிப்பவர்களையும் அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும்தமிழ் மீனவர்கள் எனப்படுகிறது. தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கியமானவர்கள் ஆகும்.
தமிழ்நாடு, 1076 கி.மீ நீள கடற்கரையைக் கொண்டுள்ளது. மீன் பிடி தொழிலில், இந்தியாவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2007–2008, கணக்கெடுப்பின்படி, மீன்பிடி 559,360 மெட்ரிக் டன்கள் ஆகும்.
கடலும் கடல் சார்ந்த இடமும்நெய்தல்எனப்பட்டது. பண்டைய தமிழர்கள் கடலில்கப்பல் கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமை மிக்கவர்களாக இருந்தார்கள். முக்கிய மாக பரதவர்கள் மற்றும் செம்படவர்கள் கடல் கடந்து பரவிய தமிழர்களும் தமிழர் பண்பாடும் இதற்கு சான்று பகிர்கின்றன.[3]