பெரி பிரபுவின் மிகவும் வளமான நேரங்கள் எனும் பிரெஞ்சு இறை வணக்க நூலில் மார்ச்சு.
மார்ச்சு மாதத்தின் பெயர், தொடக்கக்கால உரோமானிய நாட்காட்டியின் முதல் மாதமானமார்சியசு என்பதிலிருந்து வந்தது. இம்மாதத்திற்கு உரோமானியப் போரின் கடவுளும், அவரது மகன்களானஉரோமலசு, இரீமசு ஆகியோரின் மூலம் உரோமானிய மக்களின் மூதாதையருமானமார்சு என்பவரின் பெயரிடப்பட்டது. அவரது மாதம் மார்சியசு போர்ப் பருவத்தின் தொடக்கமாகும்,[1] அத்துடன் இந்த மாதத்தில் அவரது நினைவாக நடத்தப்பட்ட பண்டிகைகள் அக்டோபரில் இந்த நடவடிக்கைகளுக்கான பருவம் முடிவுக்கு வந்தன.[2] மார்சியசு உரோமானிய நாட்காட்டி ஆண்டின் முதல் மாதமாக ஏறத்தாழ கிமு 153 வரை இருந்து வந்தது,[3] மாதத்தின் முதல் பாதியில் பல சமய நிகழ்வுகள் தொடக்கத்தில்புத்தாண்டுக் கொண்டாட்டங்களாகவே இருந்தன.[4] பழங்காலத்தின் பிற்பகுதியில் கூட, மாதங்களை சித்தரிக்கும் உரோமானிய மொசைக்குகள் சில சமயங்களில் மார்ச் மாதத்தையே முதலிடத்தில் வைத்திருந்தன.[5]
மார்ச் மாதம் வடக்கு அரைக்கோளத்தில் (வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி) இளவேன்றி காலத்தின் முதல் மாதமாகவும், தெற்கு அரைக்கோளத்தில் (தென் அமெரிக்கா, ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி, ஓசியானியா) இலையுதிர்க்காலத்தின் முதல் மாதமாகவும் கொண்டாடப்படுகிறது.
மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் பண்டைய உரோமானிய நிகழ்வுகளில் மார்ச் 1, மார்ச் 14, மார்ச் 17 ஆகிய நாட்களில் கொண்டாடப்படும் அகோனியம் மார்சியால், மார்ச் 1, மார்ச் 14, மார்ச் 17 ஆகிய நாட்களில் கொண்டாடப்படும் மெட்ரோனாலியா, மார்ச் 7 ஆம் தேதி கொண்டாடப்படும் யூனோனாலியா, மார்ச் 14 அன்று கொண்டாடப்படும் எக்குவிரியா, மார்ச் 14 அல்லது மார்ச் 15 இல் கொண்டாடப்படும் மாமுராலியா, மார்ச் 15, மார்ச் 22–28 வரை கொண்டாடப்படும் இலாரியா, மார்ச் 16–17 அன்று கொண்டாடப்படும் ஆர்கெய், மார்ச் 17 இல் கொண்டாடப்படும் லிபராலியா, பச்சனாலியா, மார்ச் 19–23 அன்று கொண்டாடப்படும் குயின்குவாட்ரியா, மார்ச் 23 அன்று கொண்டாடப்படும் தூபிலஸ்ட்ரியம் ஆகியவை அடங்கும். இந்த நாட்கள் இன்றையகிரிகோரியன் நாட்காட்டியுடன் ஒத்துப்போகவில்லை.
சின்னங்கள்
மார்ச்சு மாதத்தின் மலர் டஃபோடில்நீலப்பச்சை இரத்தினக்கல்பளபளப்பான குருதிக்கல்
மார்ச் மாத பிறப்புக் கற்கள் நீலப்பச்சையும் குருதிக்கல்லும் ஆகும். இந்தக் கற்கள் தைரியத்தைக் குறிக்கின்றன. இதன் பிறப்பு மலர் டாஃபோடில் ஆகும்.[7] இதன்இராசி அறிகுறிகள் மார்ச் 20 வரைமீனம், மார்ச் 21 முதல்மேடம் ஆகும்.[8]
↑Michael Lipka,Roman Gods: A Conceptual Approach (Brill, 2009), p. 37. The views of Georg Wissowa on the festivals of Mars framing the military campaigning season are summarized by C. Bennett Pascal, "October Horse,"Harvard Studies in Classical Philology 85 (1981), p. 264, with bibliography.
↑H.H. Scullard,Festivals and Ceremonies of the Roman Republic (Cornell University Press, 1981), p. 84; Gary Forsythe,Time in Roman Religion: One Thousand Years of Religious History (Routledge, 2012), p. 14 (on the uncertainty of when the change occurred).
↑Scullard,Festivals and Ceremonies of the Roman Republic, p. 85ff.
↑Aïcha Ben Abed,Tunisian Mosaics: Treasures from Roman Africa (Getty Publications, 2006), p. 113.