Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

மந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துனிசியாவில் ஆடுகளின் மந்தை

மந்தை (Herding) என்பது, நான்கைந்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் அல்லதுவிலங்குகள் ஒன்றுபட்ட கூட்டம் மற்றும் திரளும் குழுக்களை மந்தை எனப்படுகிறது.[1] விலங்கினங்கள் தனது இனத்தை பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேய்ச்சல் மற்றும் நீர்நிலைகளைத் தேடவும் ஒன்றிரண்டு விலங்கின் தலைமையில் மற்ற விலங்குகள் மற்றும் கால்நடைகள் ஒன்றிணைந்து ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குக் கூட்டமாக புலம் பெயர்வதையே மந்தை[2] என்கிறோம்.

வரலாறு

[தொகு]

கால்நடை வளர்ப்பு என்பது ஒரு பெரிய பகுதியில் சுற்றித் திரியும் கால்நடைக் குழுக்களைப் பராமரிப்பதாகும். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றுக்கு முந்தைய வேட்டைக்காரர்கள்ஆடுகள் மற்றும்செம்மறியாடுகள் போன்ற(முன்னொரு காலத்தில்) காட்டு விலங்குகளை வீட்டு விலங்குகளாக பழக்கப்படுத்தியதால்,மேய்ச்சல் வாழ்க்கை முறை என்பது வளர்ச்சியடைந்தது. வேட்டைக்காரர்கள் தாங்கள் ஒரு காலத்தில் துரத்திய விலங்குகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம்,இறைச்சி,பால் மற்றும்பால் பொருட்கள்,கூடாரங்கள் மற்றும்ஆடைகளுக்கானதோல்களின் நம்பகமான ஆதாரங்களைப் பெற முடியும் என்பதைக் கற்றுக்கொண்டனர்.[3]

பல விலங்குகள் இயற்கையாகவே மந்தைகள் எனப்படும் குழுக்களாக வாழ்ந்து பயணிக்கின்றன. உதாரணமாக, ஆடுகள், செம்மறி ஆடுகள் மற்றும்இலாமாக்கள் போன்றவை பாதுகாப்புக்காக கூட்டமாக வாழ்கின்றன. அவை ஒரு வளமான புல்வெளியிலிருந்து இன்னொரு இடத்திற்கு ஒழுங்கமைக்கப்பட்ட திசை இல்லாமல் மந்தையாக நகர்கின்றன.சிங்கங்கள்,ஓநாய்கள் மற்றும்சருகுநாய்கள் போன்றவேட்டையாடும் விலங்குகள் வீட்டு மந்தைகளுக்கு பெரும் ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன. மேய்ப்பர்கள் பாரம்பரியமாக விலங்குகளுக்கு பாதுகாப்பை வழங்கி வருகின்றனர். மேய்ப்பர்கள் மந்தையை ஒன்றாக வைத்து மிகவும் வளமானபுல்வெளியை நோக்கி வழிநடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.[3]

இவற்றையும் பார்க்க

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]

சான்றாக

[தொகு]
  1. மந்தை குழு (HERDING GROUP)
  2. http://dogtime.com/dog-breeds/groups/herding-dogs மந்தை நாய்கள் (Herding Dogs)]
  3. 3.03.1"Herding Article". education.nationalgeographic.org (ஆங்கிலம்) - © 1996 - 2025. Retrieved2025-08-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்தை&oldid=4334023" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:
மறைந்த பகுப்பு:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp