போகொல் (Bohol) என்பது பிலிப்பீன்சின்விசயாசின்,மத்திய விசயாசுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள மூன்று மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம்தக்பிலாரன் ஆகும். இம்மாகாணம் 1854 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர்எட்கர் சட்டோ (Edgar Chatto) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 4,820.95 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக போகொல் மாகாணத்தின் சனத்தொகை 1,313,560 ஆகும்.[2]மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 43ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 25ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் 47 கிராமங்களும், 1 மாநகராட்சியும் உள்ளன. அத்துடன் இம்மாகாணத்தில்பிலிப்பினோஆங்கிலம் உள்ளடங்கலாக ஐந்து பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தில் 15 ஒக்டோபர் 2013 அன்று ஏற்பட்ட 7.2 ரிச்டர் அளவிலான பாரிய நிலநடுக்கத்தினால் 156 மக்கள் இறந்ததுடன், 374 பேர் காயம் அடைந்தனர். மேலும் அந்நிலநடுக்கத்தினால் இம்மாகாணத்திலுள்ள பல தேவாலயங்கள் சேதம் அடைந்தன.[3][4]
அதிகாரபூர்வ இணையத்தளம்