"Tourism". Belarusian Chamber of Commerce and Industry. Archived fromthe original on 2008-11-13. Retrieved2006-03-26.
பெலருஸ் (IPA: ˈbɛləruːs, பெலருசிய மொழி: Беларусь,ரஷ்ய மொழி: Белору́ссия,ஒலிப்புⓘ) முற்றிலும் நில எல்லைகளைக்கொண்ட கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு நாடாகும்.[2] இதன் எல்லைகள் வலஞ்சுழியாகரஷ்யா, உக்ரைன்,போலந்து, லித்துவேனியா,லத்வியா ஆகிய அண்டை நாடுகளைக் கொண்டுள்ளது. இந்நாட்டின் தலைநகர் மின்ஸ்க்(Minsk). பிரெஸ்த், குரோத்னோ, கோமல், மகிலெவ், வித்தெப்ஸ்க் என்பன இந்நாட்டின் மற்றைய முக்கிய நகரங்கள் ஆகும். இந்நாட்டின் 207,600 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 40% வனப்பகுதியாக உள்ளது.[3] நாட்டின் முக்கிய பொருளாதாரம் விவசாயத்திலும் விவசாய உபகரண உற்பத்தியிலும் தங்கியுள்ளது.
பெலாரஸ் என தற்போது அழைக்கப்படும் பகுதிகள் பெரும்பாலும்லித்துவேனியா, போலந்து, ரஷ்யப்பேரரசு போன்ற நாடுகளின் பகுதிகளாகவே வரலாற்றுக் காலங்களில் இருந்து வந்தன. உருசியப் புரட்சியின் விளைவாக பெலாரஸ் 1922 இல்சோவியத் யூனியனின் ஒரு குடியரசாக(பெலாரஸ்ஸியன் சோவியத் சோசலிசக் குடியரசு) மாறியது[4]. சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பு போலந்தில் 1939இல் நடைபெற்றதன் விளைவாக போலந்துக் குடியரசின் சிறுபகுதி பெலருசுடன் இணைந்தது, இதுவே இன்று காணப்படும் பெலாரசில் நிகழ்ந்த இறுதியான இணைப்பாகும்.[5][6][7][8][9][10] இந்நாட்டின் பகுதிகளும் தேசியமும் இரண்டாம் உலகப்போரில் சூறையாடப்பட்டன, பெலாரஸ் தனது மூன்றில் ஒரு பகுதி மக்களை இதன் போது இழந்தது; அரைவாசிக்கும் அதிகமான பொருளாதார வருவாயை இழந்தது. பெலாரஸ்ஸியன் சோவியத் சோசலிசக் குடியரசு 1945 இல்சோவியத் யூனியனுடனும் உக்ரேய்ன் சோவியத் சோசலிசக் குடியரசுடனும் சேர்ந்து ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சேர்ந்தது.
27 சூலை1990 இல் தனதுதன்னாட்சி உரிமையை அரசுசார்பாக அறிவித்தது. சோவியத் யூனியனின் உடைவைத் தொடர்ந்து 25 ஆகத்து 1991 இல் பெலாரஸ் குடியரசு என்ற நாடாக தம் விடுதலையை (சுதந்திரப்) அறிவிப்பு செய்துகொண்டது. 1994 இல் இருந்து அலெக்சாண்டர் லுகாசென்கோ இந்நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ளார். மேற்குலக நாட்டரசாங்கங்களின் எதிர்ப்பு இருந்தும் இவரது தலைமைத்துவத்தின் கீழ் சோவியத் காலத்து நடைமுறைகள் நடைமுறையில் உள்ளன. சில நிறுவனங்கள், நாடுகளின் மேற்கோற்படி வாக்கெடுப்புகள் நியாயமற்ற முறையில் நிகழ்ந்து அரசியல் எதிர் வேட்பாளர்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.[11][12][13] 2000ம் ஆண்டிலிருந்து ஒரு ஒப்பந்தம் அயல்நாடான ரஷ்யாவுடன் கைச்சாத்திடப்பட்டது, இது இரு நாடுகளின் பொருளாதாரங்களை இணைப்பதுடன் மற்றும் பல விடயங்களும் அடங்கும் ரஷ்யா பெலாரஸ் யூனியன் (Union of Russia and Belarus)என்னும் திட்டம் ஆகும்.
இதன் அயல்நாடான உக்ரைனில் 1986 இல் நடந்தசெர்னோபில் விபத்தினால் ஏற்பட்டஅணுக்கசிவு விளைவுகளினால் தொடர்ந்தும் இந்நாடு பாதிப்படைந்துவருகிறது.
2009ம் ஆண்டில் பெலருசின் சனத்தொகை 9.6 மில்லியன்கள் ஆகும்.[14] இந்நாட்டில் 80%க்கும் அதிகமானோர் பெலருசியர் ஆவர், இவர்களை விட சிறுபான்மையாக உருசியர்கள், போலந்து நாட்டவர், உக்ரேனியர் ஆகியோரும் உள்ளனர். இந்நாட்டின் அரசகரும மொழி இரண்டு: பெலருசிய மொழி, உருசிய மொழி.
பெலருஸ் எனும் பெயர் "வெள்ளை ருதேனியா" அல்லது "வெள்ளை ருஸ்" (Белая Русь: Белая = வெள்ளை ) எனும் மூலத்தில் இருந்து உருவானது என நம்பப்படுகின்றது. இப்பெயர் எங்கிருந்து பெறப்பட்டது என்பது பற்றி பற்பல ஐயப்பாடுகள் உள்ளன.[15] ஒரு மதக்கோட்பாட்டின் படி, பழைமை வாய்ந்த ருதேனிய நிலப்பரப்புகளில் ஒரு பகுதி லித்துவேனியாக்குட்பட்டு இருந்தது, அங்கே கிறித்துவ சிலாவிய இனம் குடிகொண்டிருந்தது, இவர்களை வெள்ளை ருதேனியர்கள் என்றும் எஞ்சிய பெரு நிலப்பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட பால்டிக் இனத்தவர் கறுப்பு ருதேனியர் என்றும் அழைக்கப்பட்டது என அறிய முடிகின்றது.[16] வேறோர் பெயர்க்காரணம், வெள்ளை ஆடை அணிந்த சிலாவிய இனத்தவர் என்பதாகும்.[15][17] இன்னும் வேறொரு கொள்கையில், பழைமை வாய்ந்த ருதேனிய நிலப்பரப்பு (போலட்ஸ்க், வித்சியெப்ஸ்க், மகிலியோவ்) தாத்தார்களால் வெற்றிகொள்ளப்படவில்லை, இப்பகுதி மக்கள் "வெள்ளை" என அழைக்கப்பட்டனர். வேறு ஒரு ஆதாரத்தில் 1267க்கு முன்னர் மொங்கோலியர்களால் வெற்றிகொள்ளப்படாத நிலம் "வெள்ளை ருஸ்" என அழைக்கப்பட்டது.[15]
தற்போதைய ஒரு பார்வையில், சிலாவனிய கலாச்சாரத்தில் திசைகளை நிறம் மூலமாகக் குறிப்பிட்டனர் என்றும், "கறுப்பு" தெற்கைக் குறிக்கவும், "வெள்ளை" வடக்கைக் குறிக்கவும் பயன்பட்டது என்றும் மேலதிகமாக வெண்கடல் வடக்கிலும், கருங்கடல் தெற்கிலும் உள்ளது போன்ற கருத்துக்களும் பெயர்க்காரணத்தைக் கூறுகின்றன. வெள்ளை ருஸ் எனும் பெயர் "வெள்ளை உருசியா" என்று மன்னராட்சியில் அழைக்கப்பட்டது, மன்னர்களால் பெரிய,சிறிய,வெள்ளை உருசியா என்று பெரும்பகுதிகள் பிரிக்கப்பட்டிருந்தது. 1991இல் பெலருசிய சோவியத் சமூகவுடைமைக் குடியரசு தனது விடுதலையின் பின்னர் "பெலருஸ்" (Belarus; Беларусь) என்று அழைக்கப்படவேண்டும் எனும் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்தது.
பெலருஸ் ஆறு மாகாணங்களாகப் (பெலருசிய மொழி: вобласць, உருசிய மொழி: область) பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் நிருவாக மையம் ஒவ்வொன்றும் மாகாணங்களின் அதே பெயரைக்கொண்ட நகரத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாகாணமும் மேலும் மாவட்டங்களாகப் (பெலருசிய மொழி: раён, உருசிய மொழி: район).பிரிக்கப்பட்டுள்ளன.
1995க்கும் 2008க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பெலருசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெலருசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பிரிவுகளாகGraphical depiction of Belarus's product exports in 28 color coded categories.
பெரும்பான்மையான பெலருசியபொருளாதாரம் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளது.[20] இது “சோவியத் பாணி” என விவரிக்கப்படுகின்றது.[21] இவ்வாறாக, 51.2% பெலருசியர்கள் அரசாங்க கட்டுப்பாட்டு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர், 47.4% ஆனவர்கள் தனியார் நிறுவனங்களிலும் (இவற்றில் 5.7% பகுதியாக வெளிநாட்டுக்குச் சொந்தமானது), 1.4% வெளிநாட்டுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் பணிபுரிகின்றனர்..[22] பெட்ரோலியம் உட்பட்ட பெரும்பாலான பொருட்களுக்கு இந்நாடு உருசியாவில் தங்கியுள்ளது.[23][24] பெலருசியாவின் முக்கியமான விவசாய உற்பத்திகள் உருளைக்கிழங்கு மற்றும் இறைச்சி உள்ளிட்ட கால்நடை மூலமான பொருட்கள் ஆகும்.[25] கனரக இயந்திரங்கள் (குறிப்பாக டிராக்டர்கள்), உரம் போன்ற விவசாயப் பொருட்கள் பெலருசியாவின் பிரதான ஏற்றுமதிகளாகும், எனினும்[26][27] பொட்டாசிய உரவகைகள் உற்பத்தியில் உலகில் முன்னோடிகளில் ஒருவராக பெலாருஸ் விளங்குகின்றது.[27]
பெலருசிய நாணயம் ரூபிள் ஆகும். பத்து ரூபிள் தொடக்கம் 200,000 ரூபிள் வரையிலான நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ளன. கொப்பேய்க் என்று அழைக்கப்படும் சில்லறை நாணயங்கள் தற்பொழுது புழக்கத்தில் இல்லை.
↑Ministry of Statistics and Analysis of the Republic of Belarus (2006)."Labour".Archived from the original on 7 ஜூலை 2012. Retrieved6 November 2007.{{cite web}}:Check date values in:|archivedate= (help)