ஒலிநயம் உள்ளசொற்களைக் கோர்த்துஉணர்ச்சியையும்கற்பனையையும் கருத்தையும் சில பரவலானயாப்பு வடிவங்களுக்கு ஏற்ப வெளிப்படுத்தலைபாட்டு எனலாம். இது வாய்மொழி இலக்கியமாகவோ அல்லதுஎழுத்து இலக்கியமாகவோ அல்லது இரண்டாகவும் அமையலாம். பொதுவாக பாட்டுஇசையுடன் பாடப்படும்.
கலைப் பாடல் என்பது பல்வேறுமொழிகளில் பல்வேறு பெயர்களில் உருவாக்கப்படுகிறது. குறிப்பாகஜெர்மனி நாட்டில் உருவாக்கப்படுகின்றபாடல்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாலிபோனிக் இசையானது உச்சத்தில் இருந்தது. அந்த நேரத்தில்வீணை இசைக்கருவியானது புகழ்பெறத் தொடங்கியது,1600 ஆம்ஆண்டு காலகட்டங்களில் பெரும்பாலானமக்கள்வீணையினை வாசிக்கக் கற்றிருந்தனர்.
1908 ஆம் ஆண்டில் ஸ்லோவக்கில்விவசாயிகளின் பாடல்களை பதிவு செய்தபோது
பாரம்பரியம்
பாரம்பரிய நாட்டார் இசை மரபுகளின் பட்டியல்
இசைக் கலைஞர்கள்
நாட்டார் இசைக் கலைஞர்களின் பட்டியல்
இசைக் கருவிகள்
நாட்டார் இசைக் கருவிகள்
மற்ற தலைப்புகள்
சமகால நாட்டுப்புற இசை
பிரபலமான இசை
மறுமலர்ச்சி
நாட்டுப்புற இசை
நாட்டார் பாடல் என்பது பாரம்பரிய மற்றும்20-ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி பெற்றஇசையின் கலவையாகத் தற்போது உள்ளது. நாட்டார் பாடல் என்ற சொற்கூறு19-ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது, ஆனால் அதற்கு முந்தைய காலகட்டத்திலும் இவ்வகையானஇசை பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய நாட்டார் பாடல்களானது பலவகைகளில் அறியப்படுகிறது. அவையாவன,
வாய்மொழியாக பாடப்படுவது,
அறியப்படாத நபர்களால் பாடப்படுவது,
இலக்கிய நயம் வாய்ந்த (கிளாசிக்கல்), வர்த்தக ரீதியாக பாடப்படும் பாடல்களுக்கு இவை எதிரானவை ஆகும்.
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பாரம்பரிய நாட்டார் பாடலில் இருந்து நவீன வடிவத்திற்கு மாற்றம் பெறத் தொடங்கியது. இந்தச் செயல்பாடு நாட்டார் இசைக்கான இரண்டாவது மறுமலர்ச்சியாக அறியப்படுகிறது.1960 களில் இவ்வகையானஇசை உச்சத்திலிருந்தது. இதன் வடிவங்களில் ஏற்பட்ட மாற்றங்களினால் இவை சில நேரங்களில் சமகால இசையாகவும் கருதப்படுகின்றன.
பாரம்பரிய நாட்டார் பாடலுக்கான விளக்கங்கள் தெளிவில்லாமல் அல்லது மழுப்புகின்ற அளவில் உள்ளது.[1] நாட்டார் இசை, நாட்டார் பாடல்,நாட்டுப்புற நடனம் என்ற பல பெயர்களில் தற்போதைய பயன்பாட்டில் உள்ளது. இவைகள் அனைத்துமேநாட்டுப்புறவியல் என்பதன் உட்பிரிவுகளாகவே கருதப்படுகிறது.நாட்டுப்புறவியல் என்ற சொல்லாடல்1846 ஆம் ஆண்டில்அமெரிக்காவின்தொல்பொருள் ஆய்வாளரான வில்லியம் தாம்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவருடைய கூற்றுப்படிநாட்டுப்புறவியல் என்பது மக்கள் தங்களின்மரபு, பழக்கவழக்கங்கள் , மற்றும்மூடநம்பிக்கைகள் போன்றவற்றை விளக்குவதற்காகப் பாடப்படுவது ஆகும் எனக் கூறியுள்ளார். நாட்டார் இசை என்பது நாட்டின் பல்வேறு இசைகளைத் தன்னகத்தே உள்ளடக்கியது ஆகும்.[2]
இரண்டுநூற்றாண்டுகள் ஆன பின்பும் இதற்கான ஒரு தெளிவானவரையறை கிடைக்கவில்லை.[3] நாட்டார் இசைக்கு என சில பண்புகள் இருந்தாலும் அவை முழுமையானஇசை என்று அறியப்படுவதற்குப் போதுமானவையாக இல்லை என கூறப்படுகிறது.[4] அறியப்படாதநபர்களால் பாடப்பட்டபாடல் என்பதே இதற்கான விளக்கமாகப் பெரும்பாலும் பார்க்கப்படுகிறது.[5]
பின்வரக்கூடிய பண்புகள்வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு நாட்டார் இசைக்கான பண்புகளாகப் பார்க்கப்படுகின்றன.[6]
இவ்வகையானபாடல்கள் வாய்மொழியாகவே பரப்பப்படுகிறது.20-ஆம் நூற்றாண்டில் இருந்த பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் பெரும்பாலும்எழுத்தறிவு அற்றவர்களாகவே இருந்தனர். இவர்கள் மற்றவர்களிடமிருந்து அந்தப்பாடல்களை அவர்கள் பாடும் போது அதைக் கேட்டுமனப்பாடம் செய்து கொண்டனர். மேலும் இவ்வகையான பாடல்கள்நூல்களின் வாயிலாகவோ அல்லது தகவல் பரிமாற்ற ஊடகங்கள் வாயிலாகவோ பரிமாற்றம் செய்யப்படவில்லை.
இவ்வகையான இசை பெரும்பாலும் அவர்களுடையபண்பாடுகளுடன் தொடர்புடையது. குறிப்பாக அவர்கள் சார்ந்துள்ள சமூகத்தோடு தொடர்புடையது ஆகும். புலம்பெயர்ந்த மக்களால் இவை பாடப்பட்ட போது இந்த இசையின் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது. குறிப்பாகக்கிரேக்க ஆசுத்திரேலியர்கள், சோமாலிய அமெரிக்கர்கள், பஞ்சாபிய கனடா மக்கள் போன்றவர்களின் பாடல்கள். இவர்கள் இநதவகையானஇசை,நடனம் போன்றவற்றை தங்களுடையமூதாதையர்களிடமிருந்து கற்றுக்கொண்டனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்கநாட்கள் மற்றும் தங்களுடைய தனிப்பட்ட நிகழ்வினை போற்றும் வகையில் இவ்வகையான பாடல்களைப் பாடுகின்றனர்.வருடத்தின் சில முக்கியநாட்களானஉயிர்ப்பு ஞாயிறு,மே நாள்,கிறித்துமசு, மேலும் ஒரு சில பாடல்கள் வருடத்தின் சுழற்சி முறையில் ஏற்படும் நாட்களை நினைவு கூறும் வகையில் அமைகின்றது.திருமணம்,பிறந்தநாள்,இறந்தோர் நாள் போன்ற நாட்களிலும் அதற்கேற்றஇசை,நடனம் போன்றவைகளும் இடம்பெறுகின்றன. மதத் திருவிழாக்கள் நடைபெறும்போது நாட்டார் இசை நிகழ்ச்சிகள் அங்கே நடைபெறும். அந்த இசை நிகழ்ச்சிகளில் குழந்தைகள் மற்றும் தொழில்முறை அல்லாத பாடகர்கள் அனைவரும் இணைந்து தங்களுடைய மகிழ்ச்சியினை இசையின் மூலமாக வெளிப்படுத்துவர்.
இந்திய நாட்டுப்புற இசை ( Indian folk music) இந்தியாவின் பரந்த கலாச்சாரப் பன்முகத்தன்மை காரணமாகப் பல பெயர்களில் வழங்கப்படுகிறது. இது,பாங்கரா (நடனம்)லாவணி, தாண்டியா, மற்றும்ராஜஸ்தானி உள்ளிட்ட பல்வேறுவடிவங்களில் உள்ளது. மற்றும்பரப்பிசை போன்றவற்றின் வருகையால் நாட்டார் இசையின் புகழ் குறையத் தொடங்கியது.இந்தியாவில் நாட்டார் இசை என்பதுநடனம் சார்ந்தது ஆகும்.
பாங்கரா: பஞ்சாபி குடியேறியபஞ்சாபிய (இந்தியா) இளைஞர்களுடன் தொடர்புடையது. இதுஇந்தியா,பாக்கித்தான் நாட்டிலிருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்களால்1970 ஆம் ஆண்டு உருவாகியது.