யுகோஸ்லாவியாவைச் சேர்ந்த டால்மேஷியாவில் நான்காம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்த இவர், ரோமையில் படித்து பின்னர் இன்னும் அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பல நாடுகளுக்குச் சென்றார்.லத்தின்,கிரேக்கம்,எபிரேயம் ஆகிய மொழிகளில் புலமை அடைந்த இவர், தனது 39 வது வயதில் குருப்பட்டம் பெற்றார். பல ஆண்டுகள் பல்வேறு இடங்களில் பணி புரிந்து, இறுதியாக பாலஸ்தீனம் அடைந்தார். அங்கு 5 ஆண்டுகள் பாலைவனத்தில் வாழ்ந்தார். இவர் இலத்தீனில்விவிலியத்தை மொழிபெயர்த்ததற்காக பெரிதும் அறியப்படுகின்றார். விவிலியத்தை எபிரேயம், அரமேயிக் ஆகிய மொழிகளிலிருந்து நேரடியாக இலத்தீனுக்கு மொழி பெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்புவுல்காத்தா (அதாவது, சாதாரணமாக பயன்படுத்துவது) என்று அறியப்படுகின்றது.[1] இந்த மொழிபெயர்ப்பை ட்ரென்ட் பொதுச்சங்கம்கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்பு என அறிவித்தது.
இவர்பெத்லகேமுக்கு அருகில் 30 செப்டம்பர் 420இல் இறந்தார் என்பர். இவர் முதலில்பெத்லகேமில் அடக்கம் செய்யப்பட்டாலும் பின்னர் இவரின் திருப்பண்டங்கள், உரோமையில் உள்ளபுனித மரியா பேராலயத்துக்கு எடுத்து வரப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.