ஈசுடர் தீவு, சலாசு இ கோமசு தீவுகள் அடங்கலாக;அந்தாட்டிக்காவில் கோரப்பட்ட 1250,000 சதுரகிமீ பகுதி சேர்க்கப்படவில்லை.
சிலி (Chile,/ˈtʃɪli/(கேட்கⓘ)) அதிகாரபூர்வமாகசிலி குடியரசு (Republic of Chile) என்பதுதென் அமெரிக்காவின் மேற்கே அமைந்துள்ள ஒரு நாடு. இது உலகின் மிகவும் தெற்கே உள்ள நாடும்,அந்தாட்டிக்காவிற்கு மிக அருகில் உள்ள நாடும் ஆகும். இதுஅந்தீசு மலைகளுக்கும்பசிபிக் பெருங்கடலுக்குப் இடையில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் நீண்டுள்ளது. 756,102 சதுரகிமீ பரப்பளவைக்[3] கொண்ட சிலியின் மக்கள்தொகை 17.5 மில்லியன் (2017-இல்) ஆகும்.[9] சிலியின் எல்லைகளாக வடக்கேபெரு, வடகிழக்கேபொலிவியா, கிழக்கேஅர்கெந்தீனா நாடுகளும், தெற்கேடிரேக் கடல் பெருவழியும் அமைந்துள்ளன. அத்துடன் இந்நாடுஈஸ்டர் தீவு, யுவான் பெர்னாண்டசு, சலாசு இ கோமசு, தெசுவென்சுராடசு ஆகிய பசிபிக் தீவுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.அந்தாட்டிக்காவில் 1,250,000 சதுரகிமீ பரப்பளவு பகுதிக்கும் உரிமை கொண்டாடுகிறது.[nb 1] சிலியின் தலைநகரமும் பெரிய நகரமும்சான் டியேகோ ஆகும். இதன் தேசிய மொழிஎசுப்பானியம் ஆகும்.
எசுப்பானியா 16-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இப்பகுதியைஇன்காக்களிடம் இருந்து கைப்பற்றித் தனது குடியேற்ற நாடாக்கியது, ஆனால் இப்போது தென்-மத்திய சிலி என அழைக்கப்படும் வசித்த சுதந்திரமானமாப்புச்சி மக்களைக் கைப்பற்றத் தவறிவிட்டது. 1818 ஆம் ஆண்டு எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்த பிறகு1830களில் ஒப்பீட்டளவில் நிலையான சர்வாதிகாரக் குடியரசாக சிலி உருவானது. 19-ஆம் நூற்றாண்டின் போது, சிலி குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் பிராந்திய வளர்ச்சியைப் பெற்றது,1880-களில்மாப்புச்சி எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது, அத்துடன்பெரு,பொலிவியா ஆகிய நாடுகளை பசிபிக் போரில் (1879-83) தோற்கடித்து, தற்போதைய வடக்குப் பகுதியைப் பெற்றது. 20-ஆம் நூற்றாண்டில்,1970கள் வரை, சிலிமக்கள்-மயமாக்கல் செயல்முறைக்கு உட்பட்டது[10][11] இதன்மூலம், விரைவான மக்கள்தொகை வளர்ச்சி,நகரமயமாக்கல் போன்றவை இடம்பெற்றன.[12] அதே நேரத்தில் அதன் பொருளாதாரத்தை முன்னெடுக்க அதன்செப்புச் சுரங்கங்கள் மூலம் ஏற்றுமதியை அதிகளவில் நம்பியிருந்தது.[13][14]1960-70களில், நாடு கடுமையான இடது-வலது அரசியலாலும், கொந்தளிப்பாலும் அல்லலுற்றது, இது 1973-இல் சிலி சதித்திட்டத்தில் உச்சக்கட்டத்தை அடைந்து,சால்வடோர் அயேந்தேயின் மக்களாட்சி இடதுசாரி அரசாங்கத்தை அகற்றியது. இதைத் தொடர்ந்துஅகுத்தோ பினோச்செட்டின் கீழ் 16 ஆண்டுகால வலதுசாரி இராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டதின் விளைவாக 3,000 க்கும் மேற்பட்டோர் இறந்தும் காணாமலும் போயினர்.[15] 1988 இல் நடந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து 1990 இல் பினோச்செட்டின் ஆட்சி முடிவுக்கு வந்து, ஒரு மைய-இடது கூட்டணியால் 2010 வரை ஆட்சி செய்யப்பட்டது.
↑"RESULTADOS CENSO 2017"(PDF).RESULTADOS DEFINITIVOS CENSO 2017. National Statistics Institute. 1 January 2018.Archived(PDF) from the original on 2022-10-09. Retrieved18 January 2017.
↑Salazar, Gabriel; Pinto, Julio (2002).Historia contemporánea de Chile III. La economía: mercados empresarios y trabajadores. LOM Ediciones. Pages 124–125.