கயானா முதன் முதலில் 1667 முதல் 1814 வரைடச்சுக்களின் குடியேற்ற நாடாக இருந்தது. பின்னர்,பிரித்தானியரின் ஆட்சியில் பிரித்தானிய கயானா என்ற பெயரில் 150 ஆண்டுகளாக இருந்து வந்தது. 1966 மே 26 இல் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. 1970 பெப்ரவரி 23 இல்குடியரசானது. 2008 இல்தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியத்தில் ஆரம்பகால உறுப்பினராக இணைந்தது. கரிபியன் சமூகம் என்ற அமைப்பில் உறுப்புரிமை கொண்டுள்ளது. இவ்வமைப்பின் தலைமையகம் கயானா தலைநகர்ஜார்ஜ்டவுனில் அமைந்துள்ளது.
பொதுநலவாய அமைப்பில் உறுப்பினராக உள்ள கயானா தென்னமெரிக்க நாடுகளில் ஆங்கிலம் அதிகாரபூர்வமொழியாக உள்ள ஒரே ஒரு நாடு ஆகும். கயானாவின் பெரும்பாலானோர் ஆங்கிலம்,டச்சு, மற்றும் அரவாக்கன், கரிபியம் கலந்த கயானியகிரியோல் மொழியையும் பேசுகின்றனர்.
215,000 சதுர கி.மீ. (83,000 சதுரமைல்) பரப்பளவு கொண்ட கயானா தென்னமெரிக்காவில்உருகுவை,சுரிநாம் நாடுகளை அடுத்த மூன்றாவது சிறிய நாடாகும்.
கயானாவில் யாய் வாய், மச்சூசி, பட்டமோனா, அரவாக், காரிப், வப்பிசானா, அரெக்குனா, அக்கவாயோ, வராவு ஆகிய ஒன்பதுபழங்குடி இனங்கள் வாழ்கின்றனர்.[7] வரலாற்று ரீதியாக, அரவாக்கு, காரிப் இனங்கள் பெரும்பான்மையாக இங்கு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.கொலம்பசு 1498 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது கடல் பயணத்தின் போது கயானாவைக் கண்டு பிடித்திருந்தாலும்,டச்சு நாட்டவரே முதன் முதலில் இங்கு தமது குடியேற்றத்தை ஆரம்பித்தார்கள்: எசெக்கிபோ (1616), பெர்பிசு (1627), தெமெராரா (1752).பிரித்தானியர்1796 ஆம் ஆண்டில் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.1814 ஆம் ஆண்டில் டச்சுக்காரர் முழுமையாக வெளியேறினர். 1831 இல் மூன்று தனித்தனியான குடியேற்றப் பகுதிகளும் "பிரித்தானிய கயானா" என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன.
1824 இல்வெனிசுவேலா விடுதலை பெற்ற பின்னர், எசெக்கிபோ ஆற்றின் மேற்குப் பகுதியை அது தனது நிலப்பகுதியாகக் கோரியது. பெர்பிசு, டெமெரேரா பகுதிகளில் குடியேற்றம் நடப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துசிமோன் பொலிவார் பிரித்தானிய அரசுக்குக் கடிதம் எழுதினார். இப்பகுதி பிரித்தானியாவுக்குச் சொந்தமானது என 1899 ஆம் ஆண்டில் பன்னாட்டு ஆணையம் தீர்ப்பளித்தது. ஆனாலும், இந்த எல்லைப் பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையில் இப்போதும் தொடர்ந்து வருகிறது.[8]
கயானா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1966 மே 26 ஆம் நாள் விடுதலை பெற்றது. பின்னர் 1970 பெப்ரவரி 23 இல்குடியரசு ஆனது. ஆனாலும் தொடர்ந்துபொதுநலவாய அமைப்பில் தொடர்ந்து உறுப்பினராக உள்ளது. இக்காலகட்டத்தில் அமெரிக்க அரசுத் திணைக்களம், அமெரிக்கசிஐஏ, ஆகியன பிரித்தானிய அரசுடன் இணைந்து கயானாவின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.[9] இந்திய வம்சாவழியினரானசெட்டி ஜகன் ஒருமார்க்சியவாதியாக அடையாளப்படுத்தப்பட்டமையினால், விடுதலைக் காலத்தின் ஆரம்ப காலத்தில் அமெரிக்க அரசு போர்பொசு பேர்ன்காம் தலைமையிலான மக்கள் தேசியக் காங்கிரசுக்கு நிதி, மற்றும் அரசியல் ரீதியாக ஆதரவளித்து வந்தது. இதன் மூலம் ஜகன் தலைமையிலான மக்கள் முன்னேற்றக் கட்சி ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
கயானாவின் மக்கள் தொகை அடர்த்தி (2005, மக்கள்தொகை/கி.மீ.2).
கயானாவின் பெரும்பாலான மக்கள் (90%) குறுகிய கரையோரப் பகுதிகளிலேயே வாழ்கின்றனர். இப்பகுதியின் அகலம் 16 முதல் 64 கி.மீ. (10 முதல் 40 மைல்) ஆகும். இது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 10% ஆகும்.[10]
கயானாவில் தற்போது இனவாரியாகக் கலப்பின மக்களே வாழ்கின்றனர். இவர்கள் முக்கியமாகஇந்தியா[11], ஆப்பிரிக்கா, ஐரோப்பா, சீனா வைச் சேர்ந்தவர்கள். அத்துடன்பழங்குடியினரும் உள்ளனர். பல்லின மக்கள் வாழ்ந்தாலும், இவர்கள் ஆங்கிலம் மற்றும் கயானிய கிரியோல் ஆகிய இரு மொழிகளை மட்டுமே பேசுகின்றனர்.
இந்தோ-கயானியர்கள் எனப்படும் கிழக்கிந்தியரே இங்கு முக்கிய இனமாகும். இவர்கள்இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்டஒப்பந்தக் கூலிகளின் மரபினர் ஆவர். இவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 43.5% (2002 கணக்கீடு) ஆகும். இவர்களுக்கு அடுத்ததாக 30.2% ஆப்பிரிக்க-கயானிகள். இவர்கள்ஆப்பிரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்ட அடிமைகளின் வம்சாவழியினராவார். 16.7% ஏனைய கலப்பினத்தவரும், 9.1% பழங்குடியினரும் ஆவார்.[1] இரண்டு பெரும் இனக்குழுக்களான இந்தோ-கயானியர்களுக்கும், ஆப்பிரிக்க-கயானியர்களுக்கும் இடையே இனக்கலவரங்கள் இடம்பெற்றுள்ளன.[12][13][14]
கயானாவின் அதிகாரபூர்வ மொழிஆங்கிலம் ஆகும். கல்வி, அரச அலுவலகங்கள், ஊடகங்கள், மற்றும் பொதுச் சேவைகளில் ஆங்கிலமே பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் பெருபாலானோர்கயானிய கிரியோல் மொழியைப் பேசுகின்றனர்.ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தகிரியோல் மொழி ஆப்பிரிக்க, மற்றும் கிழக்கிந்திய மொழிக் கலப்பினால் ஆனது.[17]அக்கவாயோ,வாய்-வாய்,மக்கூசி ஆகியகரிபியன் மொழிகளை சிறுபான்மை க்கள் சிலர் பேசுகின்றனர். அத்துடன் கலாசார, சமயக் காரணங்களுக்காகஇந்திய மொழிகளும் பேசப்படுகின்றன.