ஏர் கனடா (Air Canada,கனடாவின் தேசிய மற்றும் மிகப் பெரியவான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும். 1936இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் உலகெங்கும் 178 சேரிடங்களுக்கு திட்டமிடப்பட்ட மற்றும் ஒப்பந்த பயணியர்/சரக்கு வான்வழிப் பயணச் சேவைகளை இயக்குகிறது. சேருமிடங்களைப் பொறுத்து உலகின் பத்தாவது மிகப் பெரும் வான்வழிப் போக்குவரத்து நிறுவனமாக உள்ளது. 1997இல் உருவான வான்வழிச் சேவையாளர்களின் கூட்டணியானஇசுடார் அல்லையன்சின் நிறுவன உறுப்பினர் ஆகும்.[5] ஏர் கனடாவின் தலைமை அலுவலகம்கியூபெக்கின்மொண்ட்ரியாலில் அமைந்துள்ளது.[6] இதன் மிகப் பெரும் முனைய மையம்ஒன்ராறியோ மாகாணத்தின் மிஸ்ஸிசாகாவில் உள்ள டொரோண்டோ பியர்சன் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் அமைந்துள்ளது. ஏர் கனடாவின் பயணியர் வருமானம் 2011ஆம் ஆண்டில்CA$10.2 பில்லியனாக இருந்தது.[7] இதன் வட்டார சேவைகளுக்குஏர் கனடா எக்சுபிரசு என்ற கிளை நிறுவனத்தை உருவாக்கி உள்ளது. இதன் தலைமையகம் கியூபெக்கின் மோன்ட்ரெல் எனும் பகுதியில் உள்ளது. ஏர் கனடாவின் பெரிய செயல்பாட்டு மையம் டொரொன்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் ஆன்டரியோவின் மிசிசௌகா பகுதியில் அமைந்துள்ளது. ஏர் கனடா தனது பயணிகளின் மூலம் 2013 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 12.38 பில்லியன் கனடா டாலர்களை வருமானமாகப் பெற்றுள்ளது. கனடா நாட்டில் ஏர் கனடா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சேவைபுரிகிறது.
ஆரம்பத்தில் டிரான்ஸ் கனடா ஏர்லைன்ஸ் என்ற பெயருடன் 1936 ஆம் ஆண்டு கனடாவின் மத்திய அரசால் இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. 1938 ஆம் ஆண்டு அடுத்த கண்டங்களுக்குச் செல்லக்கூடிய தனது முதல் விமானத்தினைச் செயல்படுத்தியது. கனடா நாட்டின் அரசு ஒப்புதலுடன் 1965 ஆம் ஆண்டு ‘ஏர் கனடா’ என்று இதன் பெயர் மாற்றப்பட்டது. 1980 ஆம் ஆண்டுகளில் விமானச் சேவைகளில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் ஏற்பட்டதால், 1988 ஆம் ஆண்டு ஏர் கனடா தனியார் மயமாக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் ஜனவரி 4 ஆம் தேதி தனது போட்டி நிறுவனமான கனடியன் ஏர்லைன்ஸினை ஏர் கனடா விலைக்கு வாங்கியது. 2006 ஆம் ஆண்டு ஏர் கனடா தனது 70 வது வருட முடிவினை வெகுவிமர்சையாகக் கொண்டாடியது. அதுவரை சுமார் 34 மில்லியன் மக்கள் ஏர் கனடா விமானச் சேவையின் மூலம் பறந்திருந்தனர். ஸ்கைடிராக்ஸினால் நான்கு நட்சத்திர மதிப்பு ஏர் கனடாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.[8]
ஏர் கனடாவின் விமானக் குழுவில் உள்ள ஏர்பஸ் ஏ330, போயிங்க் 767, போயிங்க் 777 மற்றும் போயிங்க் 787, அகல பாகங்களைக் கொண்ட ஜெட் விமானங்கள் போன்ற விமானங்கள் அதிக தூரம் கொண்ட பயணங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஏர்பஸ் ஏ320 விமானக் குடும்பமான ஏ319, ஏ320 மற்றும் ஏ321, எம்பரெர் ஈ170/ஈ190 விமானக் குடும்பங்கள் போன்றவை குறுந்தூரப் பயணங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஏர் கனடா கார்கோ, ஏர் கனடா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் கனடா ரௌஃக் போன்ற பெயர்களுடன் வெவ்வேறு பயன்பாடுகளுக்கென இதன் சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் கிளை நிறுவனமான ஏர் கனடா வேகஷன்ஸ், விடுமுறை நாட்களுக்கான இலக்குகளைக் கொண்டு செயல்படுகிறது. இதற்குரிய திட்டங்களில் 90 நாடுகளுக்கும் அதிகமான இலக்குகளைக் கொண்டு, விடுமுறை காலத்தினை கொண்டாட வழிவகை செய்கின்றன. அந்தந்த பகுதிகளுக்குரிய பங்கீட்டாளர்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் மூலம் இதன் விமானச்சேவை சராசரியாக 1530 விமானங்களை தினமும் இயக்குகிறது.[9]
ஏர் கனடா 21 உள்நாட்டு இலக்குகளையும், 81 சர்வதேச இலக்குகளையும் கொண்டுள்ளது. இந்த சர்வதேச இலக்குகளில் இங்கிலாந்து வெளிநாட்டு பிரதேசங்கள், நெதர்லாந்து பகுதிகள், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் பகுதிகள் ஆகியவை அடங்கும். அத்துடன்ஆசியா,அமெரிக்கா,ஐரோப்பா மற்றும் ஓசியானியா ஆகிய கண்டங்கள் முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள விமானச் சேவை நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் உலகின் ஐந்து கண்டங்களின் 46 நாடுகளில் 181 இலக்குகளை இலக்குகளாகக் கொண்டு ஏர் கனடா செயல்பட முடிகிறது.[11]
2014 ஆம் ஆண்டில் ஏர் கனடாவின் இலக்குகள் – விமான நிலையங்கள்
தரம்
விமான நிலையம்
இலக்குகளின் எண்ணிக்கை
1
டொரன்டோ, ஆன்டரியோ
153
2
மொன்ட்ரெல், கியூபெக்
108
3
வாங்கௌவேர், பிரித்தானிய கொலம்பியா
47
4
கால்கரி, அல்பெர்டா
33
5
ஓட்டவா, ஆண்டரியோ
32
6
ஹாலிஃபாக்ஸ், நோவா ஸ்கோடியா
26
7
எட்மோன்டோன், அல்பெர்டா
12
8
வின்னிபெக், மனிடோபா
11
9
ஸாஸ்கடூன், ஸாஸ்காட்செவான்
9
10
ரெஜினா, ஸாஸ்காட்செவான்
6
2014 ஆம் ஆண்டில் ஏர் கனடாவின் செயல்பாட்டு மையங்கள் – தினசரி புறப்படும் இடங்கள்
ஏர் கனடா டொரன்டோ – மான்ட்ரெல்,நியூயார்க் –டொரன்டோ, மான்ட்ரெல் – டொரன்டோ மற்றும் வாங்கௌவெர் – விக்டோரியா போன்ற வழித்தடங்களை உயர்தர வழித்தடங்களாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த வழித்தடங்களுக்கு வாரத்திற்கு முறையே 158, 148, 143 மற்றும் 109 விமானங்களை இயக்குகிறது. இவை தவிர தனிப்பட்ட தேவைகள் மற்றும் சிறப்புப் பயன்பாடுகளுக்கென புரோவிடென்சியல்ஸ் – ஓட்டவா மற்றும் மெரிடா – ஹௌவுஸ்டன் வழித்தடங்களில் விமானங்களை செயல்படுத்துகிறது.