| மொத்த மக்கள்தொகை | |
|---|---|
| 1,00,00,000 (மலையாளி மக்கள்தொகையில் 22.91%) | |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
| மொழி(கள்) | |
| மலையாளம்/தமிழ் | |
| சமயங்கள் | |
| இந்து சமயம் | |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
| வில்லவர்,பில்லவா,பூசாரி,இல்லத்துப்பிள்ளைமார்,தமிழர் |
ஈழவர் (Ezhava,மலையாளம்:ഈഴവര്) எனப்படுவோர்இந்தியாவின்,கேரளத்தின் மாநிலத்தில் வாழுகின்ற ஒரு மிகப்பெரும் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் மாநிலத்தின் முதன்மையான முற்போக்கான பிரிவினரும் ஆவர்.[சான்று தேவை]மலபார் பகுதிகளில்திய்யா என்றும்துளு நாட்டில் பில்லவா என்றும் அழைக்கப்படுகின்றனர்.[சான்று தேவை] இவர்கள்ஆயுர்வேதமருத்துவர்களாகவும், படைவீரர்களாகவும்,களரி பயிற்சியாளர்களாகவும், விவசாயிகளாகவும், வணிகர்களாகவும் உள்ளனர். சிலர் துணித்தயாரிப்பு, கள்ளிறக்கம் மற்றும் மது வணிகம் ஆகிய தொழில்களில் உள்ளனர். ஈழத்து மன்னனார்கள் என்ற ஈழவ(திய்யா) மன்னர் பரம்பரைகளும் கேரளத்தில் இருந்தது.[1][2][3][4] சமூகத்தினுள் இருந்த அங்கச்சேகவர் என்ற வீரர் பிரிவு[5][6] உள்ளூர் மன்னர்களுக்கு படைத்தளபதிகளாக இருந்துள்ளனர். இவர்களில் சிலர்களரி பயட்டு விளையாட்டில் சிறந்து விளங்கினர்.[7][8] வட கேரளத்தில் உள்ள ஈழவர்கள் சர்க்கஸ் விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டு இந்தியாவின் சிறந்த கலைஞர்களை உருவாக்கியுள்ளனர்.
திருவிதாங்கூர் அரசியாககௌரி இலட்சுமிபாய் (1811-1815) முதல் அரசிபார்வதிபாய் (1815-1829) ஆட்சி செலுத்திய காலங்கள் வரை ,ஈழவர் தங்க ஆபரணம் அணிய தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆங்கில கவர்னர்கர்னல் மன்றோவின் முயற்சியால்ஈழவர் முதலிய பதினெட்டு சாதிக்காரர்கள் பொன், வெள்ளி நகைகளை அணியலாம் என்று இசைவு தரப்பட்டது.[9]
திருவிதாங்கூர் தோள் சீலை போராட்ட வரலாறு
நாயர்,ஈழவர், பரதவர், முக்குவர், புலையர் உட்பட 18 சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தோளுக்கு மேல் குறுக்காகச் சேலை அணிய அனுமதிக்கப்படவில்லை. இதற்கு எதிரான போராட்டமே தோள்சீலைப் போராட்டம் எனப்பட்டது.
{{cite book}}:|work= ignored (help){{cite book}}:|work= ignored (help){{cite book}}:|work= ignored (help);Check date values in:|accessdate= (help)