| ஆஷ் துரை | |
|---|---|
ஆஷ் அவரது மனைவி மேரி மற்றும் குழந்தைகளுடன் | |
| பிறப்பு | 23 நவம்பர் 1872 |
| இறப்பு | 17 சூன் 1911 (அகவை 38) |
| வேலை வழங்குபவர் | |
இராபட்டு வில்லியம் எசுகோட்டு ஆசு (Robert William Escourt Ashe) ICS (இந்திய நிருவாகப் பணி) (23 நவம்பர் 1872 – 17 சூன் 1911)பிரித்தானிய அரசின் கீழ்திருநெல்வேலி மாவட்டத்தின் தற்காலிக ஆட்சியாளராகவும் நீதிபதியாகவும் இருந்தவர்.[1][2][3] திருநெல்வேலிக்கும்தூத்துக்குடிக்கும் இடையேயுள்ளமணியாச்சி தொடருந்துச் சந்திப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.[4] சுட்டவர்திருவிதாங்கூர் சமத்தானத்தின்செங்கோட்டையைச் சேர்ந்தவாஞ்சிநாதன் என்கிற சங்கர அய்யர். ஆஷைக் கொன்றபின் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். கொலை நடந்தபோது வாஞ்சியுடன் இருந்த சங்கர கிருட்டிண அய்யர் என்ற இளைஞர் தப்பித்து ஓடிவிட்டார். ஆனால் அவர் சீக்கிரமே பிடிபட்டு தண்டனையளிக்கப்பட்டார்.[5]இந்தியச் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் போது தென்னிந்தியாவில்படுகொலை செய்யப்பட்ட பிரித்தானிய ஆட்சியாளர் ஆஷ் ஒருவர் மட்டும்தான்.பிரித்தானிய அரசு 1913ல்தூத்துக்குடியில் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பியது. இப்பொழுது அந்த நினைவுச் சின்னம் பாழடைந்த நிலையிலுள்ளது.[6][7] தற்பொழுது அது மறு சீரமைக்கப்பட்டு புது பொழிவு பெற்று நினைவுச் சசின்னமாக திகழ்கிறது(2022)