டிம் பெர்குலிங் (Tim Bergling; 8 செப்டம்பர் 1989 – 20 ஏப்ரல் 2018),[1] பரவலாக அவரதுதிரைப் பெயர்அவீச்சி (Avicii;ə-VEE-chee; வணிகமுறையில்ΛVICII மற்றும் ◢ ◤) ஓர்சுவீடிய இசைக்கலைஞரும் இசைத்தட்டாளரும் கலப்பிசைக் கலைஞரும் ஆவார். இசைத்தட்டுத் தயாரிப்பாளராகவும் விளங்கினார்.[2]
பெர்குலிங்கின் அறிமுகத் தொகுப்பில்,இட்ரூ (மெய்) (2013), இலத்திரனியல்சார் இசையில் பல்வேறுவகை இசைநடைகளும் கலந்து வெளியானது; இது இசை விமரிசகர்களிடம் பொதுவான நேர்மறையான வரவேற்பைப் பெற்றது. பதினைந்தும் மேற்பட்ட நாடுகளில் இது விரைவிலேயே முதல் பத்திடங்களில் ஒன்றாக இடம் பிடித்தது. ஆத்திரேலியா, சுவீடன், டென்மார்க்கு,ஐக்கிய அமெரிக்க நடனவிசை பட்டியல்களில் முதலிடம் பிடித்தது.[3][4][5][6] 2015இல் தனது இரண்டாவது கலைக்கூடத் தொகுப்பானஇஸ்டோரீசு (கதைகள்) வெளியிட்டார். ஆகத்து 10, 2017இல்அவீச்சி (01) என்ற இசைத்தட்டை வெளியிட்டார்.[7] ஏப்ரல் 20, 2018 இல்ஓமான் நாட்டில் மரணமடைந்தார்.[8]
அவீச்சி 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் இசைத்தட்டாளர்களுக்கான இதழால் (DJ Magazine) ஆண்டுதோறும் வெளியிடப்படும் முதல் 100 இசைத்தட்டாளர்கள் பட்டியலில் மூன்றாவதாக குறிப்பிடப்பட்டிருந்தார்.[9] 2012ஆம் ஆண்டில் டேவிட் கெத்தாவுடன் அவர் ஆற்றிய படைப்பு "சன்ஷைன்" (கதிரொளி)க்காகவும்[10] 2013இல் தனதுபாட்டு "லெவல்சு" (நிலைகள்)க்காவும் இருமுறைகிராமி விருதுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ குட் பி தி ஒன் (நிக்கி ரோமெரோவுடன்), "வேக் மீ அப்!" (அமெரிக்கப் பாடகர் அலோ பிளாக்குடன்), "யூ மேக் மீ", "ஏய் பிரதர்", "அடிக்டக்டு டு யூ", மற்றும் "கொல்லைடு" (பிரித்தானியப் பாடகர் லியோனா லெவிசுடன்) பரவலாக அறியப்பட்ட இவரது பாடல்களில் சிலவாகும்.
அவீச்சி செப்டம்பர் 8, 1989 இல்ஸ்டாக்ஹோம்,சுவீடனில் பிறந்தார். அவரது பிறந்த பெயர் டிம் பெர்லிங்; இருப்பினும் அவர் தொழில் ரீதியாக அவீச்சி, டிம் பெர்கு என்ற பெயர்களால் அறியப்படுகிறார்; டிம் லைடென், டாம் ஹேங்சு, டிம்பர்மேன் என்பன இவரது பிற புனைபெயர்களாகும்.
அவீச்சி 2011 இல், பன்னாட்டுப் புகழை அடைவதற்கு முன்னர்,இலண்டனில் ஒரு கச்சேரியில்.
2008 ஆம் ஆண்டில் தனது 18ஆம் அகவையில் இசையுலகிற்கு வெளிவந்தார்; தம்முடையகாமோதோர் 64 குறுங்கணினியில் இருந்த "சோம்பேறி ஜோன்சு" என்ற காணொளி விளையாட்டுப் பாட்டை கலப்பிசையில் மீளமைத்து வெளியிட்டார்; இது சோம்பேறி லேசு என்ற பெயரில்ஸ்ட்ரைக் ரிகார்டிங் நிறுவனத்தால் விற்பனைக்கு விடப்பட்டது.
அவீச்சிபீட் டாங் என்ற வணிகப் பெயருடன் ஏப்ரல் 2008 இல்மேன்மேன் என்ற இசைத்தொகுப்பை சொந்தமாக வெளியிடப்பட்டார். இது "பாசுட்டு டிராக்சு" என்ற போட்டியில் 70 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதலிடத்தை வென்றது. இதனைத் தொடர்ந்து அவீச்சி உலகெங்கிலும் உள்ள பல இசைத்தட்டு வெளியீட்டாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் முன்பதிவு முகமைகளைத் தொடர்பு கொண்டார்.
2012ஆம் ஆண்டில் டேவிடு கெத்தாவுடன் இணைந்து பாடிய "சன் ஷைன்" என்ற பாட்டிற்காக சிறந்த நடன இசை என்ற பகுப்பில்கிராமி விருதுக்கு நியமிக்கப்பட்டார்.[10] லியோனா லெவிசின்கொல்லைடு என்ற ஒற்றைப் பாட்டில் அவீச்சியின் "ஃபேடு இன்டூ டார்க்னசு" என்ற பாடலின் துளிகள் இடம்பெற்றது. இப்பாடலில் இதற்குரிய மூலக்குறிப்பை குறிப்பிடாததால் அவீச்சி இதற்கு தடை வாங்க முயன்றார். இருப்பினும் இச்சர்ச்சைக்கு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணும் வண்ணம் லெவிசின் சார்பாளர் லெவிசும் அவீச்சியும் இணைந்து இப்பாடலை வெளியிடுவதாக அறிவித்தார்.[25]
2016இல் அவீச்சிக்கு அதிகளவிலானகுடிப்பழக்கத்தால்கடும் கணைய அழற்சி ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதன்பிறகு நேரலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை நிறுத்தினார்.[26]
ஏப்ரல் 20, 2018 அன்றுபெர்குலிங்கின் தொடர்பாளர் டயானா பேரன்ஓமான் நாட்டின்மசுக்கட்டு நகரில் அவர் இறந்ததாக அறிவித்தார். இவரது விசிறிகளுக்கும் குடும்பத்தினருக்கும் கால்வின் ஆரிசு, மார்ஷ்மெல்லோ, டெட்மவுசு, மார்ட்டின் காரிக்சு, செட் போன்ற இசைத்தட்டாளர்களும்ரீட்டா ஓறா, துவா லிப்பா,மடோனா போன்ற பாடகர்களும் உட்பட பல இசைக்கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.[27]
↑Nevins, Jake (20 April 2018)."Avicii: chart-topping EDM star dies aged 28".The Guardian. Guardian News and Media Limited. Retrieved20 April 2018.In 2016, Avicii retired from live performing due to health reasons, having suffered from acute pancreatitis owing, in part, to excessive drinking. In 2014, his gallbladder and appendix had been removed.