கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய நாடுகள் அவையின் பொது மன்றத்தில் உறுப்பு நாடுகளின் தூதுவர்கள் உலக விடயங்கள் குறித்து கலந்துரையாடுவர்.
அரசியல் (ஒலிப்புⓘ) எனும் சொல், கிரேக்க மொழியில், பொலிடிகா (Politiká) என்ற சொல்லிலிருந்து உருவானது.
வரையறை: "நகரங்களின் விவகாரங்கள்" என்று வரையறுக்கப்படுகிறது. நகரங்களின் விவகாரங்களில், நகரத்தில் உள்ள ஒவ்வொரு குழுவிற்கும், குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருத்தமான தீர்மானங்களை எடுக்கும் செயல் என்பதே இதன் விளக்கம் ஆகும்.
அரசியல் என்பதுமக்கள்குழுக்களில் முடிவெடுக்கும் முறையைக் குறிக்கும் சொல். பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம்,கல்வி, மற்றும்சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.
அரசறிவியல், அரசியற் கல்வி என்பது அரசியல் நடத்தை குறித்து கற்பதுடன், அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அதனைப் பயன்படுத்துதல் தொடர்பாகவும் ஆய்வு செய்கின்றது.
அரசியல் என்பது அதிகாரம் சார்ந்தது என்று கூறப்படுகிறது.[1] அரசியல் அமைப்பு என்பது ஒரு சமூகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் வழிமுறைகளை வரையறுக்கும் ஒரு கட்டமைப்பாகும். அரசியல் சிந்தனையின் வரலாறானது ஆரம்ப பழங்காலத்துக்கு முந்தையது. இதைப்பற்றி, 'பிளேட்டோவின் (Plato) குடியரசு', 'அரிஸ்டாட்டிலின் (Aristotle) அரசியல்' மற்றும் 'கன்ஃபியூசியஸின் (Confucius) படைப்புகள்', போன்ற நூல்கள் தெளிவாக விளக்குகின்றன. இவை அரசியல் என்பது என்ன என்பது பற்றிப் பல கோணங்களிலிருந்து பார்த்து எழுதப்பட்ட வரைவிலக்கண நூல்களாகும்.
அரசமைப்புகள் மற்றும் அவற்றின் அதிகார எல்லைகள் சார்ந்து அரிஸ்டாட்டில் எழுதிய கிரேக்க புத்தகத்தின் தலைப்புஅரசியல் (Πολιτικά, பொலிடிகா) என்பதாகும். இந்த வார்த்தையானது நகரங்களின் அலுவல்கள், குழுக்களின் நடவடிக்கைகள், பயின்று வரும் வாழ்க்கைத்தொழில்கள், திட்டமிட்டு ஆற்ற வேண்டிய காரியங்கள், தீர்க்க வேண்டிய விவகாரங்கள் ஆகிய பல்வேறு பொருள்களை உள்ளடக்கியுள்ளது. 15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆரம்பகால ஆங்கிலத்தில் இப்புத்தகத்திற்கு பொலிடிக்ஸ் (Polettiques) என்று பெயரிடப்பட்டது.[2] இது நவீன ஆங்கிலத்தில் அரசியல் என்று மாறியது. 1430 ஆம் ஆண்டு இதன் ஒருமைப் பெயர், பிரெஞ்சு மொழியில் பொலிடிக் (politique) என்றும், இலத்தீன் மொழியில் பொலிடிகஸ் (politicus) என்றும் அழைக்கப்பட்டது.[3] கிரேக்க வார்த்தையான பொலிடிகிகோஸ் (πολιτικός-politikos) என்பதை இலத்தீனாக்கம் செய்ததின் மூலம் பொலிடிகஸ் (politicus) என்ற புதிய வார்த்தை பெறப்பட்டது.
இதன் பொருள்: குடிமகன்,[4] குடிமக்கள், குடிமக்களுக்காக, குடிமக்களை, குடியியல், குடிமுறைக்குகந்த, குடிமுறைக்குரிய, உரிமையியல் நாட்டுக்கு உரியவை,[5] போன்றவை. இது, நகரம் என்னும் பொருளில், போலிஸ் (πόλις) என்றும் அழைக்கப்படுகிறது.[6]
போர் வளர்ச்சிக் கலையின் அடிப்படையில் மாநிலத்தின் தோற்றம் அறியப்படுகிறது. வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது, தங்களின் இருப்பினை உறுதி செய்து கொள்ளவும், நவீன வகையிலான போர்முறைகளைக் கையாளவும், வெற்றிகரமான பாதையை அமைத்துக்கொள்ளவும் அனைத்து அரசியல் சமூகங்களும் கடமைப்பட்டிருக்கின்றன.[7]
சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் முடியாட்சி நடைபெற்றது. அந்நாடுகளில் அரசர்களும், பேரரசர்களும் தெய்வீகத் தன்மை உடையவர்களாகக் கருதப்பட்டனர். அரசுரிமைக்காக மேற்கொள்ளப்பட்ட பிரஞ்சு புரட்சி "அரசர்களின் தெய்வீக உரிமை" எனும் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கி.மு. 2100 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து, கி.பி. 21 ஆம் நூற்றாண்டு வரை சுமேரியாவில் (Sumeria) முடியாட்சி நீண்ட காலம் நீடித்திருந்தது.[8]
அரசர்கள் தம் அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள, ஆலோசகர்கள் மற்றும் உயர்ந்தோர் குழுவினர் அடங்கிய சபையின் உதவியுடன் ஆட்சி புரிந்தனர்.[9] இச்சபையின் தலையாய செயல்பாடுகள் மற்றும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய பணிகளில் சில:
அரசர்களின் பணப் பேழைகளையும், கருவூலத்தையும் எப்பொழுதும் நிரம்பிய நிலையிலேயே வைத்திருப்பது
திருப்திகரமான வகையில் இராணுவ சேவைப் பராமரிப்பு மேற்கொள்ளல்
அரசரால் பிரபுக்கள் மற்றும் நிலக்கிழார்கள் நிறுவப்படுதலை உறுதிப்படுத்துதல்
பிரபுக்களைக் கொண்டு வீரர்களைப் பராமரித்தல்
பிரபுக்களின் உதவியுடன் போருக்குத் தயார்ப்படுத்தும் பணி மேற்கொள்ளல்
இந்த முடியாட்சி ஆலோசகர்களுடன், முடியாட்சி அமைப்பில் இல்லாத பிறர் முன்வைத்த அதிகாரத்திற்கான பேச்சுவார்த்தைகள், அரசியலமைப்புசார் முடியாட்சிகள் மேலெழும்பக் காரணமாயின. இதுவே அரசியலமைப்பு அடிப்படையிலான அரசாங்கம் துளிர்க்க அடிப்படைக் காரணமானது.[11]
1770, ஜனவரி, 9ல் பிரித்தானிய மக்களவைக் கூட்டத்தில் வில்லியம் பிட் எல்டர்(William Pitt the Elder) பேசியது: "வரம்பற்ற அதிகாரத்தைப் பெற்றுள்ளவர்களின் மனதை சிதைக்கவும், பிழைபடுத்தவும் அந்த அதிகாரமே பொருத்தமானதாகவும், போதுமானதாகவும் இருக்கிறது."[12] ஒரு நூற்றாண்டிற்குப் பின், ஜான் டால்பெர்க் ஆக்டன் (John Dalberg-Acton) இக்கருத்தைப் பின்வருமாறு எதிரொலித்தார். "அதிகாரம் ஊழல் செய்ய முனைகிறது. முழுமையான அதிகாரம், முற்றிலும் ஊழல்படுத்திவிடும்."[13]
அரசாங்க அதிகாரிகள் சட்டபடியான அதிகாரங்களைத் தனிப்பட்ட லாபத்திற்காக முறைகேடாகப் பயன்படுத்துவது 'அரசியல் ஊழல்' ஆகும்.
பிற நோக்கங்களுக்காக அரசாங்க அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும் அரசியல் ஊழல் ஆகும்.
அரசாங்கத்துடன் நேரடித் தொடர்பற்ற, தனிநபர், தனிக்குழுவினர், நிறுவனங்கள் போன்றவர்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயல்கள் அரசியல் ஊழலில் ஒரு வகை ஆகும்.
அரசாங்க அதிகாரிகள், பணியாளர்கள் போன்றவர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ கடமைகள் மற்றும் / அல்லது அதிகாரங்களை, சட்டவிரோத செயல்களில் தொடர்புபடுத்தி இருந்தாலோ அல்லது பயன்படுத்தி இருந்தாலோ அதுவும் அரசியல் ஊழல் ஆகும்.[14]
உலகளவில், ஆண்டுதோறும் 1 டிரில்லியன் அமெரிக்க (US) டாலர்களுக்கும் மேலான பணம் அரசியல் ஊழல் என்ற பிரிவில் லஞ்சத் தொகையாக மட்டும் பகிரப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[15]
அரசியல் அறிவியல், அரசியல் ஆய்வு போன்ற கல்விப்புலங்கள், அரசியல் ரீதியாக அதிகாரங்களைக் கையகப்படுத்தல் மற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை ஆராய்கின்றன.[16] அரசியல் விஞ்ஞானி ஹரோல்ட் லாஸ்வெல்லின் (Harold Lasswell) வரையறைப்படி, "அரசியல் என்பது யார் எதை, எப்போது, எப்படிப் பெறுகிறார் என்பதைப்பற்றி அறிந்தாய்தல்"[17] என்பதாகும். தத்துவவாதி சார்லஸ் பிலாட்பெர்க்கின் (Charles Blattberg) வரையறைப்படி, "அரசியல் என்பது முரண்பாடுகளுக்கு உரையாடல் மூலம் பதிலளித்தல்" என்பதாகும். இவர் அரசியல் சித்தாந்தங்களை அரசியல் தத்துவங்களிலிருந்து முழுமையாக வேறுபடுத்துகிறார்.[18]
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடங்கள் 'அரசியல்' பாடத்திற்கு இடமளித்ததன் மூலம் இப்பாடம் கல்வித்துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 1857 இல் பிரஷ்யாவில் குடியேறிய பிரான்சிஸ் லீப்பெர் (Francis Lieber) இதன் முதல் பங்களிப்பாளர் ஆவார்.[19]
தற்கால அரசாங்கத்தில் பல வடிவங்கள் உள்ளன. அவற்றுள் அதிகமாகப் பயின்று வரும் இரண்டு வகைகள்:
பிரான்ஸ் (France) மற்றும் சீனா (China) ஆகிய நாடுகளில் உள்ளது போன்ற ஒரு வலிமையான மத்திய அரசாங்கச் செயல்பாடு.
இங்கிலாந்தில் உள்ளது போன்ற உள்ளாட்சி அமைப்பிலான அரசாங்கம். இதில் பண்டைய அதிகாரப் பிரிவுகளின் தாக்கம் அதிகம். இது ஒப்பீட்டளவில் பலவீனமானதும் ஆனால் குறைந்த அதிகாரத்துவம் உடையதுமான ஓர் அரசாங்கம் ஆகும்.
பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளில் பயின்று வரும் மத்திய அரசாங்க அமைப்பு மற்றும் இங்கிலாந்தில் உள்ள உள்ளாட்சி அரசாங்க அமைப்பு ஆகியவை வெவ்வேறு திசைகளில் செயல்படும் அரசாங்க அமைப்பு முறைகளாகும். இது
மேற்கண்ட இரண்டு வடிவங்களையும் இணைத்து இரண்டிற்கும் பொதுவான ஒருங்கிணைக்கப்பட்ட அரசாங்க அமைப்பு உருவாக்கப்பட்டது. இது மத்திய மற்றும் மாநில ஒன்றிணைந்த கூட்டாட்சி அரசாங்க முறை என்று பெயரிடப்பட்டது. வெவ்வேறு நாடுகளில் ஒன்றிணைந்த கூட்டாட்சி அரசாங்க முறை செயல்படுத்தப்பட்ட கால வரலாறு:
முதலில் சுவிட்சர்லாந்து (Switzerland)
1776 ஆம் ஆண்டில், அமெரிக்கா (United States)
1867 ஆம் ஆண்டில், கனடா (Canada)
1871 இல் ஜெர்மனி (Germany)
1901 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியா (Australia)
ஒன்றிணைந்த கூட்டாட்சியைக் கட்டுப்படுத்தும் வழிகள்:
'அரசியலமைப்பின் சட்டம் - ஓர் அறிமுக ஆய்வு' எனும் புத்தகத்தில், பேராசிரியர் ஏ.வி. டைஸி (A. V. Dicey) கூட்டாட்சி அரசாங்க அரசியலமைப்புச் செயல்பாடுகளை, முக்கிய அம்சங்களின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கிறார்.[20] அவை
மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகள், சர்ச்சைகள், சிக்கல்கள், சொற்பூசல்கள், தகராறுகள், போன்றவற்றைத் தடுக்கும் பொருட்டு எழுதப்பட்ட உச்ச அரசியலமைப்பு சட்டக் கட்டுப்பாடு.
மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு.
கூட்டாட்சி அரசாங்கத்தின் நிர்வாகம், சட்டமன்ற கிளைகள் போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்படும்போது, சுயாதீனமாக அரசியலமைப்பு சட்டங்களை ஆராய்வதோடு, சட்டத்தின் பொருள் விளக்கி நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்ற கட்டுப்பாடு.
டிக்கர்சனும் பிளானகனும் (Dickerson and Flanagan) எழுதிய 'அரசு மற்றும் அரசியலுக்கான ஒரு அறிமுகம்', என்ற புத்தகத்தில், அரசியலுடன் கல்வியை இணைத்துக் கூறும்போது பாடப்புத்தகம் என்பது குறிப்பாக பொதுத் திட்டங்களுக்காக, மக்கள் ஆதரவைத் திரட்டுவதன்மூலம், முரண்பாடுகளைத் தீர்க்கும் ஒரு நடைமுறையாகும் எனக் குறிப்பிடுகிறார்.
அரசியலாளர்மா சே துங் கூறியது: "அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போர். போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்"
அரசியலாளர்ஓட்டோ வொன் பிஸ்மாக்கின் கூற்று: "அரசியல் என்பது சாத்தியப் பாட்டுக்குரிய ஒரு கலையாகும்"
1651 ஆம் ஆண்டில்,தோமஸ் ஹோப்ஸ் (Thomas Hobbes) என்பவர் தனது புகழ்பெற்றலெவியாதன் (Leviathan) என்னும் நூலை வெளியிட்டார். அதில், அரசின் தோற்றத்தை நியாயப்படுத்துவதற்கான தொடக்ககால மனித வளர்ச்சியின் மாதிரி (model) ஒன்றை முன் மொழிந்தார். இலட்சியத் தன்மை கொண்ட இயற்கையின் அரசு பற்றிய அவரது விளக்கத்தின்படி, ஒவ்வொரு மனிதனுக்கும், இயற்கையின் வளங்கள் மற்றும் தொடர்பில் சமஉரிமை உண்டு என்றும் ஒவ்வொருவரும், அவ்வளங்களை அடைவதற்கு எத்தகைய வழியையும் பயன்படுத்துவதற்கான சுதந்திரத்தை பெற்றிருந்தார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
இவ்வாறான ஒரு ஒழுங்கு, எல்லோருக்கும் எதிராக எல்லோரும் போர் செய்யும் ஒரு நிலையை உருவாக்கியதாக ஹோப்ஸ் கூறுகிறார். மேலும், குறிப்பிட்ட பாதுகாப்புக்காக, ஒவ்வொருவரும் ஒரு சமூக ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டு தன் முழு அளவு உரிமையை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருந்தனர் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். இத்தகைய சண்டைப் போக்குகளுக்கான தீர்வு, ஒரு மையப்படுத்தப்பட்ட ஆதிக்கவாத அரசு ஒன்றை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த அரசை அவர் லெவியாதன் என்று குறிப்பிட்டார்.
↑The Diets and Sayings of the Philosophers (Early English Text Society, Original SeriesNo. 211, 1941; reprinted 1961), p. 154: "the book of Etiques and of Polettiques".
↑Charlton T. Lewis, Charles Short."A Latin Dictionary". Perseus Digital Library. Retrieved2016-02-19.
↑Jenks, Edward.A history of politics. pp. 73–96.The origin of the State, or Political Society, is to be found in the development of the art of military warfare.
↑Blattberg, Charles (July 2001). "Political Philosophies and Political Ideologies". Public Affairs Quarterly15 (3): 193–217. பன்னாட்டுத் தர தொடர் எண்:0887-0373.
↑Farr, James; Seidelman, Raymond (1993).Discipline and history. University of Michigan Press.ISBN0-472-06512-2....a chair at Columbia in 1857 as professor of history and political science, the very first of its kind in America.
↑Jenks, Edward (1900).A history of politics. J. M. Dent & Co. pp. 1–164. Retrieved2016-02-19.