அங்கோலாவின் குறிக்கோள் முழக்கம் “இலத்தீன் மொழியில் "Virtus Unita Fortior", (விர்ட்டசு ஊனித்தா ஃவோர்த்தியோர்) “ஒன்றுபட்டால் நல்லொழுக்கம் வலுப்படும்” அல்லது “ஒற்றுமையே நல்லொழுக்க வலு" என்பதாகும்.
அங்கோலாவின் படைத் துறையானது அங்கோலாவின் படைக்கலம் தாங்கிய விடுதலை பொது அணியின் (((Forças Amadas Populares de Libertação de Angola—FAPLA) சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. அது நிலப்படை, கடற்படை, வான்படை என்னும் முப்பிரிவுகளும் கொண்டது. 2002ன் செய்திகளின்படி நிலப்படையில் மொத்தம் 400 டாங்கிகளுடன் 90,000 படையாட்களும், 7 கலங்களுடன் 4000 கடற்படைஞர்களும், 104 போர்வானூர்திகளுடன் 6000 வான்படையாட்களும் கொண்டிருந்தது