 | செம்பழுப்புத் தலைப்பஞ்சுருட்டான் (Merops leschenaulti) என்பதுமெரோபிடே என்ற தேனீ-உண்ணி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும், இது இந்தியா, வங்காளதேசம், இலங்கை முதல் தென்கிழக்கு ஆசியா முழுவதும் இந்தோனேசியா வரை பரவியுள்ளது. இது 18–20 செ.மீ நீளமும் 26–33 கிராம் எடையும் கொண்டது, இவற்றின் பாலினங்கள் தோற்றத்தில் ஒத்தவை. இது பல வண்ணப் பறவை, நெற்றி, கழுத்து போன்ற பாகங்கள்கசுக்கொட்டை நிறமாகவும், ஏனைய பாகங்கள் பச்சை, மஞ்சள், கருப்பு, நீல நிறமாகவும் இருக்கும். இது முக்கியமாக பூச்சிகளை, குறிப்பாக தேனீக்கள், குளவிகளை உண்ணும். இப்புகைப்படம்இலங்கையின்யால தேசிய வனத்தில் எடுக்கப்பட்டது. படம்:Charles J. Sharp தொகுப்பு ·சிறப்புப் படங்கள் |