விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 13-வது படமாக 'கிங்டம்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.
கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கிங்டம் படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.
இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார்.
படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இப்படத்திற்கான இசையமைப்பு மற்றும் பின்னணி இசை என அனைத்து பணிகளையும் முடித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.
இந்நிலையில், கிங்டம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, கிங்டம் திரைப்படம் வரும் 31ம் தேதி வெளியாகும் என ரிலீஸ் தேதிக்கான ப்ரோமோவை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
நடிகை நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதி இன்றி 'சந்திரமுகி' பட காட்சிகளை பயன்படுத்த தடை கோரி பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரியும், 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மேலும், ஆவண படத்தின் மூலம் ஈட்டிய லாபக் கணக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக ஆவண பட தயாரிப்பு நிறுவனம், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், 1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே, ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
KVN Productions வழங்கும் "கேடி - தி டெவில்" படத்தை பிரேம் இயக்கியுள்ளார். பான்-இந்தியா பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், சஞ்சய் தத், நோரா ஃபதேஹி மற்றும் V ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டீசர் ஜூலை 11 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு வெளியாக இருக்கிறது.
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நீண்ட நாட்களுக்கு பிறகு சசிகுமார் நடித்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது.
அடுத்ததாக சசிகுமார் `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.
தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜூலை 10 வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.
கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். இவர்களுடன் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
படத்தில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார்.தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்காக சொல்லப்பட்டுள்ளது.
திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் விஷ்ணு விஷாலின் மகளுக்கு நடிகர் அமீர் கான் மிரா என்ற பெயரை வைத்தார். மேலும் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்றில் விஷ்ணு விஷால் கூறியது " ஓஹோ எந்தன் பேபி படத்தை அமீர் கான் சார் பார்த்தார். பார்த்துவிட்டு படம் முடியும் போது ஆனந்த கண்ணீர் விட்டு. இம்மாதிரியான உறவுமுறை பற்றி கூறும் திரைப்படங்கள் தற்பொழுது குறைவாகிவிட்டது . திரைப்படம் நன்றாக இருக்கிறது என பாராட்டினார்"
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து 'லவ் மேரேஜ்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக உருவானது. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடித்திருந்தார்.
திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை இயக்கிய சண்முக பிரியன் அடுத்து மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவன தயாரிப்பில் படத்தை இயக்கவுள்ளார். இப்படம் பெரிய பொருட் செலவில் உருவாக இருக்கிறது.
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் இதற்கு முன் வெற்றி படங்களான குட் நைட், லவ்வர் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய திரைப்படங்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒன்ஸ் மோர் மற்றும் ஹாப்பி எண்டிங் ஆகிய திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் பவன் கல்யாண் நடிப்பில் பத்ரி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து மகேஷ் பாபு நடிப்பில் போக்கிரி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்று படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்தனர்.
இந்நிலையில் பூரி ஜெகநாத் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் திரைப்படத்தை இயக்குகிறார்.
படத்தில் விஜய் சேதுபதியுடன் தபு,சம்யுக்தா, துனியா விஜய், நிவேதா தாமஸ், மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.படத்தின் படப்பிடிப்பு பணி இன்று ஐதராபாத் உள்ள செட்டில் தொடங்கியது. தொடர்ந்து சில வாரங்களுக்கு அங்கு படப்பிடிப்பு நடக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
இப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
AND IT BEGINS ???The raw and real journey of#PuriSethupathi begins on the sets today in Hyderabad ❤️?Major talkie portions featuring Makkalselvan@VijaySethuOffl and fierce@iamsamyuktha_ are being canned in this packed schedule and will have a continuous shoot?A…pic.twitter.com/O0946z7rgh
— Puri Connects (@PuriConnects)July 7, 2025
கடந்த 2018 ஆம் ஆண்டு ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், சரவணன் மற்றும் அம்மு அபிராமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ராட்சசன். இப்படம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருந்தார்.
இந்நிலையில் விஷ்ணு விஷால் ஓஹோ எந்தன் பேபி திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
விஷ்ணு விஷால் அடுத்து இரண்டு வானம் மற்றும் ஆர்யன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் த்யாரிப்பில் 3 படங்களில் நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால் அடுத்து கட்டா குஸ்தி 2 மற்றும் ராட்சசன் 2 படத்தில் நடிக்க இருப்பதாக கூறினார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகத்தை படக்குழு வெளியிட்டது. இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. உலகளவில் இப்படம் 80 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டது. படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து முடிந்த நிலையில் படப்பிடிப்பை இன்று படக்குழு பூஜை விழாவுடன் தொடங்கியுள்ளது. பூஜை விழா இன்று சென்னை முருகன் கோவிலில் நடைப்பெற்றது.
இந்த பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.
நானி நடிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் கடந்தாண்டு வெளியானது சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படம். இவரது இயக்கத்தில் இதற்கு முன் அண்டே சுந்தரனிகி என்ற படத்தில் நானி நடித்தார்.
சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் திரைப்படமாக உருவானது. இப்படத்தில் நானியுடன் எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
இந்நிலையில் விவேக் ஆத்ரேயா அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்திற்கு கதை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்பொழுது ஜன நாயகன் படத்தை இயக்கும் எச்.வினோத்தும் ரஜினிற்கு கதை கூறியுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு எந்த படத்தில் நடிக்கவுள்ளார் என தெரியவில்லை.
லவ் டுடே, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியீட்டிற்கு முன்பே வணிக ரீதியாக லாபமடைந்துள்ளது. படத்தின் டிஜிட்டல் மற்றும் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூபாய் 25 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இது மைத்ரி மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் லாபமாக அமைந்துள்ளது. 2 படங்கள் மட்டுமே நடித்த பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு இவ்வளவு கோடி கொடுத்து வாங்கியது பெரிய விஷயமாகும்.
.இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் எஸ்.ஜே சூர்யா. குறிப்பாக பல நட்சத்திர ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.. இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யா மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். படத்திற்கு கில்லர் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளரை படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
படக்குழு வெளியிட்ட போஸ்டரில் "நாம் இருவரும் சேரும் சமயம், நம் கைகளிலே வரும் இமயம்.நாம் தொட்டது எதுவும் அமையும். இது அன்பால் இணைந்த இதயம்" என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.
எஸ் ஜே சூர்யா நடித்து இயக்கிய நியூ, அன்பே ஆருயிரே படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். படத்தில் நடிக்கும் பிற நடிகர்களை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படம் இந்தியா மற்றும் மெக்சிகோ ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட இருக்கிறது.
எஸ்ஜே சூர்யா அடுத்து சர்தார் 2 மற்றும் லவ் இன்சூரன் கம்பெனி ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.